Visa: சென்னையில் இருந்து அமெரிக்கா செல்பவரா? ஒரு 2 வருசம் காத்திருக்க முடியுமா?

American Embassy Visa Interview: விசா நேர்காணலுக்கு சென்னையைத் தேர்வுசெய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காக இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 24, 2023, 08:28 PM IST
  • விசா நேர்காணலுக்கு ஏன் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்?
  • சென்னை அமெரிக்க ஹை கமிஷனுக்கு ஏன் டிமாண்ட்?
  • விசா நேர்காணலுக்காக இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டுமா?
Visa: சென்னையில் இருந்து அமெரிக்கா செல்பவரா? ஒரு 2 வருசம் காத்திருக்க முடியுமா? title=

நியூடெல்லி: உலகெங்கிலும் உள்ள மற்ற துறைகளைச் சேர்ந்த ஊழியர்களை இந்தியாவில் உள்ள விசா அலுவலகங்களுக்கு மாற்றுவது உட்பட இந்தியர்களுக்கான விசா காத்திருப்பு நேரத்தைக் குறைக்க அமெரிக்கா கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், அமெரிக்க விசாக்களுக்கான விண்ணப்பங்கள் பெரும் ஏற்றம் கண்ட மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

ஆனால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான துணைத் தூதரகங்களில் அமெரிக்காவுக்கு செல்வதற்காக விசா நேர்காணலுக்கு நீண்ட கால காத்திருப்பு என்ற நிலை மாறி வந்தாலும், சென்னையில் மட்டும் நிலைமை மாறவில்லை.

மும்பை (332 நாட்கள்) மற்றும் கொல்கத்தாவில் (357 நாட்கள்) காத்திருப்பு நேரங்கள் ஒரு வருடத்திற்கும் கீழே குறைந்திருந்தாலும், விசா நேர்காணலுக்கு சென்னையைத் தேர்வுசெய்யும் விண்ணப்பதாரர்கள் இரண்டு வருடங்கள், சரியாகச் சொல்ல வேண்டுமானால், B1/B2 விசா நேர்காணலுக்காக 680 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க | NRI: பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

புது தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சுற்றுலா மற்றும் வணிக விசா சந்திப்புகளுக்கான மிகக் குறுகிய காத்திருப்பு - 247 நாட்கள் ஆகும்.

F-1 மாணவர் விசாக்களுக்கு காத்திருப்புக் காலம்
கொல்கத்தா: 78 நாட்கள்
மும்பை: 73 நாட்கள்
டெல்லி: 74 நாட்கள்
சென்னை: 58 நாட்கள் 

இந்தியாவில் விசா நேர்காணலுக்கான காத்திருப்பு நேரம் "மிக அதிகமாக" இருக்கிறது.இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஜனவரி 2023 இல் 1 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களைச் செயல்படுத்தியது,2022 இல், அமெரிக்கா 125,000 மாணவர் விசாக்களை வழங்கியது, இது மற்ற எந்த ஆண்டையும் விட அதிகம் ஆகும்.

மூன்றாம் நாட்டிலிருந்து விண்ணப்பித்தல்
ஆனால், ஏதாவது ஒரு காரணத்திற்காக விசா நேர்காணலுக்காக காத்திருக்க முடியாதவர்களுக்கு, மூன்றாம் நாட்டு தேசிய (third country national processing,TCN) விசா செயலாக்கம் என்ற அவசரகால உதவி இருக்கிறது.மூன்றாம் நாட்டு தேசிய விசா என்பது உங்கள் சொந்த நாட்டைத் தவிர வேறு நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து பெறப்பட்ட விசா விண்ணப்பம் அல்லது விசா ஆகும்.

மேலும் படிக்க | நாட்டுக்காக போரடினால் சிறையா? ஏற்கத் தயார்: சூளுரைக்கும் ராகுல் காந்தி

சிறப்பு சனிக்கிழமை நேர்காணல்

விசா நேர்காணல் காலத்திற்கான காத்திருப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள துணைத் தூதரகங்கள் ஜனவரி 21 அன்று "சிறப்பு சனிக்கிழமை நேர்காணல்களை" நடத்தியது, எதிர்காலத்தில் இதுபோன்ற பல நேர்காணல்களை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது..

வரும் மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சனிக்கிழமைகளில் அப்பாயிண்ட்மெண்ட்டுகளுக்கான "கூடுதல் இடங்களை" திறக்கும் பணி தொடரும்.

ஜனவரி மற்றும் மார்ச் 2023 க்கு இடையில், விசா செயலாக்க திறனை அதிகரிக்க வாஷிங்டன் மற்றும் பிற தூதரகங்களில் இருந்து டஜன் கணக்கான தற்காலிக தூதரக அதிகாரிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இந்தியாவில் உள்ள அமெரிக்க மிஷன் 2,50,000 கூடுதல் B1/B2 நேர்காணல்களை வெளியிட்டது. B1 வணிக விசாவாக இருந்தாலும், B-2 சுற்றுலா விசாவாகும்.

மும்பையில் உள்ள துணைத் தூதரகம் தனது வார நாள் வேலை நேரத்தை நீட்டித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ’பாரத் ஜோடோ’ வலுக்கும் கூட்டணி கட்சிகளின் ‘கை’

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News