யாழ்ப்பாண நூலக எரிப்பின் 41வது நினைவு தினம்; அஞ்சலி செலுத்திய பொது மக்கள்

Burning of Jaffna Public Library: யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட 41 ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 1, 2022, 02:52 PM IST
  • யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.
  • தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம்.
  • யாழ்ப்பாண பொது நூலகம்1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி வன்முறைக் குழு ஒன்றினால் தீயூட்டப்பட்டது.
யாழ்ப்பாண நூலக எரிப்பின் 41வது நினைவு தினம்; அஞ்சலி செலுத்திய பொது மக்கள் title=

யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட 41 ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில்  யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

நினைவேந்தலின்போது  யாழ்ப்பாண பொது மக்கள் நூலகத்தை உருவாக்க காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா அவர்களுக்கும், யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலின்போது யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலக பிரதம நூலகர், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தவிர வாசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை: உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு 

யாழ்ப்பாண பொது நூலகம்1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி வன்முறைக் குழு ஒன்றினால் தீயூட்டப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் நிவாரண பொருட்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News