NRI மைனர் பெயரில் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வது எப்படி!

பெற்றோர் இருவரும் வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருக்கும் நிலையில், குழந்தைகளுக்காக முதலீடு செய்யும்போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்ன, எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 2, 2023, 07:02 PM IST
  • முதலீடு செய்யப்படும் வங்கிக் கணக்கு என்ஆர்இ/என்ஆர்ஓ கணக்கு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • அமெரிக்கா அல்லது கனடாவில் இருந்தால், விவரங்களைப் பூர்த்தி செய்து FATCA/CRS சுய அறிவிப்பை வழங்கவும்.
  • மைனர் வயது வந்தோர் வயதை (18 வயதை) அடையும் போது, அந்தஸ்தை மைனரில் இருந்து மேஜராக மாற்ற விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
NRI மைனர் பெயரில் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வது எப்படி! title=

மியூச்சுவல் ஃபண்டு எனப்படும் பரஸ்பர நிதியங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI), தங்கள் மைனர் குழந்தை சார்பாக முதலீடு செய்வதில் பல சவால்கள் உள்ளன. பெற்றோர் இருவரும் வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருக்கும் நிலையில், குழந்தைகளுக்காக முதலீடு செய்யும்போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்ன, எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மைனர் சார்பாக முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

மைனரின் பாதுகாவலர்/ பெற்றோர் KYC இணக்கமாக இருக்க வேண்டும்.

மைனர் பிறந்த தேதி மற்றும் மைனர் மற்றும் பாதுகாவலர் இடையேயான உறவின் ஆதாரத்திற்கான ஆவணங்கள் தேவை. மைனரின் பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் அல்லது பள்ளியிலிருந்து வெளியேறும் சான்றிதழ் ஆகியவை இதற்கு உதவும்.

முதலீடு செய்யப்படும் வங்கிக் கணக்கு தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மைனர் அல்லது பாதுகாவலர் உடையதாக இருக்க வேண்டும்.

SIP, STP, SWP போன்றவற்றில் பதிவுசெய்யப்பட்ட நிலையான அறிவுறுத்தல்களில், மைனர், வயது வந்தோர் ஆக தகுதி பெறும் தேதிக்கு முன்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படும்.

மைனர் பெயரில் தனியாக தகவல்கள் பதிவிடபட்டு  தனியாக போர்ஃபோலியோ உருவாக்கப்படும்.

சிறார்களுடன் கூட்டு கணக்குகள் அனுமதிக்கப்படாது.

NRI ஆக முதலீடு

இப்போது நீங்கள் ஒரு NRI முதலீட்டாளராக இருந்தால், செய்ய வேண்டியவை:

உங்கள் குடியிருப்பு நிலையை AMCக்கு தெரிவிக்கவும்.

முதலீடு செய்யப்படும் வங்கிக் கணக்கு என்ஆர்இ/என்ஆர்ஓ கணக்கு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் FATCA (வரி தொடர்பான தகவல்) விதிகளுக்கு இணங்க தேவையான தகவலை வழங்கவும்.

மேலும் படிக்க | வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு NPCI அளித்த குட் நியூஸ், அதிகரிக்கும் வசதி!!

மைனர் சார்பாக முதலீடு செய்யும் NRI

நீங்கள் ஒரு மைனர் சார்பாக முதலீடு செய்யும் வெளிநாடு வாழ் இந்தியர் NRI என்றால், உங்கள் பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் நீங்கள் KYC இணங்குகிறீர்களா என்பதைச் சரிபார்க்கப் பயன்படும் PAN போன்ற விவரங்களை வழங்குவதன் மூலம் ஆன்லைனில் போர்ட்ஃபோலியோவை உருவாக்கவும்.

போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் போது வரி நிலை என குறிப்பிடும் போது,  "மைனர் சார்பாக (NRE)" அல்லது "மைனர் சார்பாக (NRO)" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மைனர் ஒரே கணக்கு வைத்திருப்பவர் அல்லது கூட்டு வைத்திருப்பவர் வங்கிக் கணக்குகள் மூலம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் விருப்பங்களில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு பாக்ஸ் திரையில் தோன்றும். ஏனென்றால், இதன் வருமானம் அத்தகைய கணக்குகளில் மட்டுமே வரவு வைக்கப்படும்.

மேலும் படிக்க | Transit Visa: ஸ்டாப் ஓவர்களில் பயணிப்பவர்களுக்காக சவூதியின் இ-ட்ரான்ஸிட் விசா

பிறப்புச் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பதிவேற்றவும்.

நீங்கள் அமெரிக்கா அல்லது கனடாவில் இருந்தால், மீதமுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து FATCA/CRS சுய அறிவிப்பை வழங்கவும். 

என்ஆர்ஐ மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எப்படி?

மைனர் வயது வந்தோர் வயதை (18 வயதை) அடையும் போது, அந்தஸ்தை மைனரில் இருந்து மேஜராக மாற்ற விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு நீங்கள் PAN ஐ வழங்க வேண்டும், KYC செயல்முறையை முடிக்க வேண்டும், வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் மற்றும் SIP, STP, SWP ஆகியவற்றுக்கான புதிய தகவல்களை உருவாக்க வேண்டும். உங்கள் வரி நிலை பற்றிய தகவலையும் வழங்க வேண்டும்.

மேலும் படிக்க |  வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் கார்ட் பெறுவது எப்படி: முழு செயல்முறை இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News