Weight Loss Tips: வேகமாக அதிகரிக்கும் உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க வேண்டுமா? இந்த பதிவில் அதற்கான வழிகளை காணலாம்.
Weight Loss Tips: உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆனால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. மோசமான வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாதது ஆகியவை தொப்பையை அதிகரிக்கச் செய்யும். எடை அதிகரிப்பு காரணமாக, பல கடுமையான நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும், பல வித நற்பண்புகளும் அதிகம் உள்ளது. இது செரிமானத்தை சீராக்கி, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, தொப்பை கொழுப்பை குறைத்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகின்றது.
காஃபின் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றம் நன்றாக இருந்தால், உடல் வேகமாக கொழுப்பை எரிக்கும். இது ஆற்றலாக மாறும். அதனால்தான் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பிளாக் காபி குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
கிரீன் டீயில் ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் கேட்டசின்கள் அதிகம் உள்ளன. கிரீன் டீ பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை எரிக்க உதவுகிறது. இது உடல் எடையை குறைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
மஞ்சளை பாலில் கலந்து குடித்தால் பருவ நோய்கள் நீங்கும். நல்ல தூக்கம் கிடைக்கும். இவற்றுடன், இது உடல் கொழுப்பையும் திறம்பட கரைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
பல வித ஆரோக்கிய நன்மைகள் கொண்ட மசாலாவான இலவங்கப்பட்டை நீர் குடிப்பது தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும். இதுமட்டுமின்றி இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் உதவும். இதை தொடர்ந்து உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. எலுமிச்சை சாறு கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.
புதினா இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் செரிமானத்தை ஊக்குவித்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொலஸ்ட்ராலை கரைக்கும். கெமோமில் தேநீர் மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கிறது. இது கொழுப்பைக் குறைத்து எடையைக் குறைக்கவும் உதவுகிறது. செம்பருத்தி தேநீர் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. இவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
தொப்பை கொழுப்பைக் (Bely Fat) குறைப்பதில் குருதிநெல்லி நல்ல பலன்களைத் தருகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கலோரிகளை எரித்து கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
வெள்ளரியில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது உடலில் கூடுதல் கொழுப்பை அதிகரிக்காமல் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. இதில் உள்ள பண்புகள் உடலுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றன. இதில் புதினா இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்தும் குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.