இந்த 4 சீனியர் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா தொடர் தான் கடைசி! இனி வாய்ப்பு கிடைக்காது!

India vs Australia: தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடர் முடிந்த பிறகு 4 சீனியர் வீரர்களுக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்று தகவல் வெளியாகி வருகிறது.

1 /6

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. தற்போது மூன்றாவது டெஸ்டில் இந்தியா விளையாடி வருகிறது. இதிலும் இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது.  

2 /6

இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடர் முடிந்த பிறகு அணியில் உள்ள சீனியர் வீரர்களுக்கு இனி வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்ற தகவல் பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியாகி உள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

3 /6

டி20 கேக்கட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு பெற்றுள்ளார். எனினும் அவருக்கு அணியில் தற்போது வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும் பெரிதாக ரன்களும் அடிப்பதில்லை. இதனால் இனி அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. அவருக்கு பதில் அக்சர் பட்டேல் அவருடைய இடத்தை பிடிக்க தயாராக உள்ளார்.

4 /6

பங்களாதேஷ் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் அஸ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தருக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியா தொடர் முடிந்த அஸ்வின் ஓய்வையை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 /6

சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சதம் அடித்து இருந்தாலும் விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் அவருக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

6 /6

டி20 உலக கோப்பையை வென்றதிலிருந்து இந்திய அணி ரோகித் சர்மாவின் தலைமையில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுகிறது. மேலும் ஒரு பேட்ஸ்மேனாகவும் ரோகித் சர்மா சரியாக விளையாடுவதில்லை. இதனால் இனி அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.