பட்ஜெட் விலையில் போன் வாங்கணுமா? Samsung Galaxy M04 ட்ரை பண்ணுங்க!

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய சாம்சங் கேலக்சி எம்04 ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலைக்குள் கிடைக்கும் சிறந்த மொபைலாக விளங்குகிறது.

1 /5

கேலக்சி எம்04 பின்புறத்தில் 13 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை கொண்ட கேமராக்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது, மேலும் எல்இடி பிளாஷ்லைட்டுடன் கூடிய கேமராக்கள் உள்ளது.  

2 /5

சாம்சங் கேலக்சி எம்04 ஆனது வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் 6.5-இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளேவைப் கொண்டுள்ளது. இது தவிர மொபைலில் 8 ஜிபி ரேம் உள்ளது மற்றும் ரேம் ப்ளஸ் அம்சத்தில் 8ஜிபி வரை ரேம் கிடைக்கிறது.  

3 /5

128 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ள மொபைலானது, 5000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இந்த மொபைல் மின்ட் க்ரீன், கோல்டு, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது.

4 /5

6.5 இன்ச் டிஸ்பிளேவுடன், ஹெச்டி + தெளிவுத்திறனையும், 720x1600 பிக்சல்களின் ஹெச்டி + தெளிவுத்திறனை வழங்குகிறது. இதில் மீடியாடெக் ஹீலியோ P35 செயலி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மொபைலில் 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற அம்சங்கள் உள்ளது.

5 /5

சாம்சங் கேலக்சி எம்04 மொபைலானது ரூ.8,499 முதல் விற்பனை செய்யப்பது, இந்திய சந்தையில் இந்த மொபைல் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கப்பெற்றது. பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு மக்கள் மத்தியில் இன்றுவரை மவுசு உள்ளது.