Weight Loss Tips: இரவு உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இரவு உணவில் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். அந்த வகையில், இரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால் உடல் எடையை விரைவாகவே குறைக்கலாம்.
இரவு உணவை தூங்குவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்னரே எடுத்துக்கொள்ளுங்கள். அதாவது, இரவு 7-8 மணிக்கே சாப்பிடுவது நல்லது.
மைதாவால் செய்யப்பட்ட பிரட், பாஸ்தா, பேஸ்ட்ரீஸ் போன்ற இனிப்புகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இது ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.
காரமான உணவுகளை தவிருங்கள். இது நெஞ்செரிச்சல் பிரச்னையை ஏற்படுத்தலாம். இது சிலருக்கு செரிமானத்தில் பிரச்னையை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுக்கும். இது உடல் எடை குறைப்பில் பாதிப்பை தரலாம்.
காபி, டீ, எனர்ஜி பானங்கள் ஆகியவற்றை இரவில் அருந்த வேண்டாம். இதில் இருக்கும் காஃபின் தூக்கத்தை கெடுக்கும்.
உப்பு அதிகம் இருக்கும் சிப்ஸ், வத்தல், உப்புக்கண்டம் போன்ற மாமிசங்களை சாப்பிட வேண்டாம். இது உங்களின் தாகத்தை அதிகரிக்க செய்து உடலில் உள்ள நீர்ச்சத்தை எடுத்துவிடும்.
அதிக புரதம் உள்ள மாட்டிறைச்சி போன்றவற்றை சாப்பிட வேண்டாம். இது செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுக்கும். தூக்கத்தை கெடுத்துவிடும்.
வறுத்த உணவுகளை சாப்பிடாதீர்கள். அதில் கொழுப்பு, கலோரிகள், சோடியம் ஆகியவை அதிகமாக இருக்கும். இது செரிமானத்தையும், தூக்கத்தை கெடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவானவை. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.