Summer Drinks For Weight Loss: கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க, சில பிரத்யேக பானங்கள் உள்ளன, அவற்றை குடித்து வந்தால் எடை வேகமாக குறையத் தொடங்கும். அந்த பானங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் -
தவறான உணவுப் பழக்கவழக்கம், மோசமான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் உடல் எடை கூடத் தொடங்கிவிடுகிறது. இதற்கு தீர்வு பெற மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனவே நீங்களும் இந்த வரிசையில் வருகிறீர்கள் என்றால், இந்த கோடைக்காலம் சில பானங்களை குடித்து வாருங்கள். இந்த 5 பானங்கள் எவை என்று பார்ப்போம்.
ஆரஞ்சு நீர் கோடையில் உடல் எடையை குறைக்க உதவும். இதில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.
ஆப்பிள் மற்றும் இலவங்கப்பட்டை உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பானத்தை தயாரிக்க, ஒரு பாட்டில் தண்ணீரில் நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் மற்றும் ஒரு துண்டு இலவங்கப்பட்டை சேர்க்கவும். இந்த தண்ணீரை நாள் முழுவதும் குடித்துக்கொண்டே இருங்கள். இது வளர்சிதை மாற்றத்தை நன்றாக வைத்திருக்க உதவும்.
கோடையில் உடல் எடையை குறைக்க மோர் குடிக்கலாம். இதில் புரோபயாடிக்குகள் உள்ளதால், ஜீரண சக்தி பலப்படும். இதில் சிறிது கறுப்பு உப்பு மற்றும் மிளகு கலந்து குடிக்கலாம்.
உடல் எடை குறைய வெள்ளரி ஜூஸ் குடிக்கலாம். இதில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளதால், வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். இந்த சாறு உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.
உடல் எடை குறைக்க புதினா மற்றும் எலுமிச்சை நீரை குடிக்கலாம். இதனால் உடலில் சேரும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையை குறையத் தொடங்கும். அதனுடன், கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை