ஒவ்வொரு மாதமும் முதல் தேதியைப் போலவே, இந்த முறையும் நவம்பர் 1 முதல் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் சிலவை உங்களுக்கு பயனளிக்கும் மற்றும் சிலவை உங்கள் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கும்.
வணிக கேஸ் சிலிண்டர் விலையை நவம்பர் 1 முதல் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.115.50 குறைத்துள்ளன.
ஏவியேஷன் டர்பைன் எரிபொருளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால், வரும் காலங்களில் விமான டிக்கெட் விலை அதிகரிக்கலாம்.
கேஸ் சிலிண்டர்களை வீட்டிற்கு டெலிவரி செய்ய உங்களுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) தேவைப்படும். சிலிண்டரை முன்பதிவு செய்த பிறகு, வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இதை கூறிய பின்னரே சிலிண்டரை பெற முடியும்.
ஐஆர்டிஏவும் இன்று முதல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 1 முதல், காப்பீட்டாளர்கள் KYC விவரங்களை வழங்குவது அவசியமாகிவிட்டது.
நவம்பர் முதல், 5 கோடிக்கும் குறைவான வருவாய் உள்ள வரி செலுத்துவோர், ஜிஎஸ்டி ரிட்டனில் 5 இலக்க HSN குறியீட்டை உள்ளிட வேண்டும்.
டெல்லியில் நவம்பர் 1ம் தேதி முதல் மின்சார மானியம் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், மின் மானியத்திற்கு பதிவு செய்யாத மக்களுக்கு அதன் பலன் கிடைக்காது.
நவம்பர் 1 முதல் அனைத்து ரயில்களின் கால அட்டவணையையும் இந்திய ரயில்வே மாற்றியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வீட்டை விட்டு வெளியேறும் முன் முழுமையான பட்டியலைச் சரிபார்ப்பதுக் கொள்ளவும்.