முகத்தில் நிறமிகள் அதிகம் உள்ளதா? இந்த வழிகளை பின்பற்றினால் போதும்!

தற்போது பலருக்கும் பிக்மென்ட்டேஷன் எனப்படும் தோல் நிறமி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /6

முகத்தில் ஏற்படும் நிறமியை சரி செய்ய அதிக செலவு செய்ய தேவையில்லை. இதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. உங்கள் சருமத்தை பொழிவு பெற செய்ய மட்டம் நிறமிகளை அகற்ற உதவும் சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களை பற்றி பார்ப்போம்.  

2 /6

பப்பாளி: சரும பாதுகாப்பில் பப்பாளி அதிக பயன்களை தருகிறது. பப்பாளியில் பாப்பைன் என்ற நொதி உள்ளது. இதனை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் நிறமிகளை மறைத்து, ஒளிரும் சருமத்தை பெற முடியும்.

3 /6

மஞ்சள்: மஞ்சளில் இயற்கையாகவே நிறமியை போக்கும் சக்திகள் உள்ளது. இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இழந்த சருமத்தை மீண்டும் பெற உதவுகிறது. தினசரி பயன்படுத்துவதன் மூலம் நிறமியை சரி செய்யலாம்.

4 /6

ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய செய்கிறது. ஆப்பிள் சைடர் வினிகருடன், தண்ணீரைச் சேர்த்து தினசரி முகத்தை கழுவி வந்தால் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாம். 

5 /6

எலுமிச்சை சாறு: எலுமிச்சையில் உள்ள பண்புகள் முகத்திற்கு புத்துணர்ச்சி தருகின்றன. மேலும் நிறமியை குறைத்து, சருமத்தை பிரகாசமாக்கி, கரும்புள்ளிகளை மறைக்க உதவுகிறது. 

6 /6

உருளைக்கிழங்கு சாறு: உருளைக்கிழங்கு நிறமியை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கரும்புள்ளிகளை நீக்கி, பிரகாசமான சருமத்தை பெற உதவுகிறது.