Kitchen Masalas To Control Diabetes: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் பல நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க, நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த மசாலாப் பொருட்களைச் சாப்பிட வேண்டும் என்பது குறித்து உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் கூறுவதை தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து கட்டுக்குள் வைக்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் உடல்நிலை மோசமடையக்கூடும். அதோடு, சிறுநீரகம், கண்பார்வை பாதிக்கப்படும் ஆபத்து அதிகம். அதோடு, இதய நோய் அபாயமும் அதிகரிக்கும்.
வெந்தயம்: இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வெந்தயம் அருமருந்து. இதனை இரவில் ஊற வைத்து, காலையில் இதனை தண்ணீர் உடன் குடிக்கலாம். வெந்தயம் போட்டு கொதிக்க வைத்த நீரும் பலன் தரும்.
மஞ்சள்: அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மிகவும் நன்மைகள் கொண்ட மஞ்சளை காலையில், ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதும், இரவில் பாலில் போட்டு கொதிக்க வைத்து குடிப்பதும் நல்ல பலன் தரும்.
கொத்தமல்லி விதை என்னும் தனியா இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகின்றன. இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைப்பு செயல்முறையை மேம்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். காலை உணவின் போது ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது தனியா பொடி சேர்த்து கொதிக்க வைத்த நீரை அருந்துவது பலன் தரும்.
இஞ்சி இன்சுலின் அளவை சீராக்கி, சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் பெற்றது. இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீஷியம், நார்ச்சத்து ஆகியவை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
பிரிஞ்சி இலை உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டும் தன்மை கொண்டது. இதனால் இன்சுலின் அளவு சீராகி, ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
இலவங்கப்பட்டை இன்சுலினை தூண்டி சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் டைப் 2 சர்க்கரை நோயின் அபாயத்தையும் தவிர்க்கலாம். இலவங்கபட்டை சேர்த்து கொதிக்க வைத்த நீரை வெறும் வயிற்றில் அருந்துவது பலன் தரும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.