கொலஸ்ட்ரால் அதிகமானால்... இந்த அறிகுறிகள் தோன்றும், அலட்சியப்படுத்தாதீர்கள்

High Cholesterol Symptoms: அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், இந்த அபாயகரமான அறிகுறிகள் கை மற்றும் கால்களில் தென்படும்.

இன்றைய பிஸியான காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பெரும்பாலான மக்கள் பின்பற்றுவதில்லை. அதனால்தான், சர்க்கரை நோய், உடல் பருமன், இரத்த அழுத்தம் உட்பட உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீங்கள் சாப்பிடும் ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லமால் இருப்பது எடையை அதிகரித்து, உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். எனவே உங்கள் உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பதை உங்கள் விரல்கள் மூலம் எவ்வாறு தெரிந்துகொள்ளலாம் என்று இக்கட்டுரையில் காணுங்கள்.

1 /6

உணர்வின்மை: கொலஸ்ட்ரால் அதிகரிப்பதன் காரணமாக ரத்த ஓட்டம் குறையும் நிலையில் கால்களில் அடிக்கடி உணர்வின்மை ஏற்படலாம். 

2 /6

கால் பிடிப்புகள்:  கால்கள் அடிக்கடி பிடித்துக் கொண்டால், உடலில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவுகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அர்த்தமாகும். கால்களுக்கு செல்லும் ரத்த நாளங்கள் பாதிப்பு அடைந்துள்ளன என்பதன் அறிகுறியாகவே பிடிப்புகள் உண்டாகும்.

3 /6

விரல்களில் அதிக வலி: அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், விரல்கள் மற்றும் கால் விரல்களில் அதிக வலி ஏற்படலாம். கைகள் மற்றும் கால்களின் இரத்தத் தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவதால் அவற்றைத் தொடும்போது வலி உணர்வு ஏற்படும்.

4 /6

நகங்களில் மாற்றங்கள்: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், கை, கால் நகங்களில் மஞ்சள் படிவுகள் ஏற்படலாம்.

5 /6

மருக்கள் தோன்றும்: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது கை அல்லது கால்களிலும் மருக்கள் தோன்றத் தொடங்கும். மருத்துவ மொழியில் இதை சாந்தெலஸ்மா என்று கூறுவார்கள்.

6 /6

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.