யூடியூப் போட்ட பக்கா பிளான்... இனி இதனை பயன்படுத்த முடியாது..!

பலருக்கு வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது கூகுளின் யூடியூப் தளம். இவைகளுக்கு அடித்தளமாக இருப்பது விளம்பரங்களே.

 

1 /6

ஆனால், அந்த விளம்பரங்களைத் தடை செய்யும் கருவிகள் (Ad Blockers) இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைத் தற்போது தடை செய்யத் திட்டமிட்டிருக்கிறது யூடியூப் நிறுவனம்.  

2 /6

ஆட் ப்ளாக்கர்களைப் பயன்படுத்துவதன் மூலம் விளம்பரங்களைத் தவிர்த்துவிட்டு காணொளியை மட்டும் பயனர்கள் பார்க்க முடியும். இது விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமல்லாது யூடியூபின் சந்தாதாரர் முறையில் கிடைக்கும் வருவாயையும் சேர்த்து பாதிக்கும்.  

3 /6

எனவே, இந்த ஆட் ப்ளாக்கர்களை யூடியூப் தளத்தில் தடை செய்யும் வசதியை தற்போது சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம்.  விளம்பரங்கள் இல்லாமல் காணொளிகளைக் கண்டுகளிக்க ப்ரீமியம் வசதியை அந்நிறுவனமே வழங்கி வருகிறது.  

4 /6

2022-ம் ஆண்டில் 80 மில்லியன் ப்ரீமியம் சந்தாதாரர்கள் அளவை எட்டியிருக்கிறது யூடியூப். இந்தப் ப்ரீமியம் வசதியை இன்னும் பல மில்லியன் பயனாளர்களை பயன்படுத்த வைக்க பல புதிய திட்டங்களைத் தீட்டியிருக்கிறது யூடியூப்.   

5 /6

அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆட் ப்ளாக்கர்களை யூடியூப் தளத்தில் தடை செய்யும் திட்டத்தையும் செயல்படுத்தவிருக்கிறது. ஆட் ப்ளாக்கர்களைப் பயன்படுத்தும் பயாளர்களுக்கு தற்போது பாப்-அப் ஒன்று தோன்றுகிறதாம்.   

6 /6

அதில் யூடியூபில் விளப்ரங்களை அனுமதிக்க வேண்டும் அல்லது யூடியூப் ப்ரீமியம் வசதிக்கு சந்தா செய்ய வேண்டும் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படுவதாக இணையத்தில் ஒரு ஸ்கிரீன்ஷாட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டம் சோதனை முறையில் இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.