முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுக்கு மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது.
இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தான் நிரபராதி என்றும், சுப்ரீம் கோர்ட்டின் அந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும் பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு சி.பி.ஐ.யின் பதிலை சுப்ரீம் கோர்ட்டு கேட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பானுமதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விடுதலை செய்ய வேண்டும் என்ற பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணையின் போது பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தைப் படித்துக்காட்டி, மின்னணு டிப்ளோமா படித்த பேரறிவாளனுக்கு, 9 வாட் பேட்டரி கொண்டு வெடிகுண்டு தயாரிக்கப்படும் என்பதுகூட தெரியாதா எனப் பேரறிவாளனின் வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ராஜிவ் கொலை வழக்கில், 9 வோல்ட் பேட்டரியை தாண்டி பேரறிவாளனுக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் இருக்கின்றன, அதற்கு உங்கள் பதில் என்ன பேரறிவாளன் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
மேலும், பேரறிவாளனுக்கு விடுதலைப்புலி இயக்கத்தினருடன் நேரடி தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்காக இப்போது தீர்ப்பை மாற்ற வேண்டுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Supreme Court dismisses the plea of convict AG Perarivalan to recall its judgment convicting him in 1998 in Rajiv Gandhi assassination case.
— ANI (@ANI) March 14, 2018