சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு புதிய திரிபு வகை, ஒரு புதிய நம்பிக்கையை விண்வெளி வீரர்களுக்கு கொடுத்துள்ளது.
ஆம், இனி விண்வெளியில் இருக்கும் வீரர்கள், தங்கள் தேவையான காய்கறிகளை தாங்களே பயிரிட்டு வளர்த்துக் கொள்ளலாம் என்று ஹைதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (JPL) இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது
விண்வெளியில் நிலவும் தனித்துவமான சூழ்நிலையில், தாவரங்கள் வளர உதவும் எரிபொருளை உருவாக்க, இந்த புதிய பாக்டீரியா திரிபு வகை உதவக்கூடும் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வுக் குழுவிற்கு நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். தாவர வளர்ச்சியை மேம்படுத்தும் பாக்டீரியா மற்றும் தாவர நுண்ணுயிரிகளை ஆராய்வதில் நிபுணத்துவம் பெற்ற ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அப்பா ராவ் பொடில், CSIR அமைப்பை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ராம்பிரசாத் ஆகியோர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மெத்திலோபாக்டீரியாசி (Methylobacteriaceae) வகையில் சேர்ந்த இந்த பாக்டீரியா விகாரங்கள் தொடர்ச்சியாக இரண்டு ஐ.எஸ்.எஸ் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டன
ஒரு திரிபு மெத்திலோரூப்ரம் ரோடீசியம் (Methylorubrum rhodesianum) என அடையாளம் காணப்பட்டாலும், மற்ற மூன்று முன்னர் கண்டுபிடிக்கப்படாத புதிய இனத்தைச் சேர்ந்தவை.
மரபணு பகுப்பாய்வுகள் அவை மெத்திலோபாக்டீரியம் இன்டிகத்துடன் (Methylobacterium indicum) நெருக்கமாக தொடர்புடையவை என்பதை வெளிப்படுத்தின.
புகழ்பெற்ற இந்திய பல்லுயிர் விஞ்ஞானி மற்றும் தமிழ்நாட்டின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் அஜ்மல் கானின் நினைவாக, ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை பாக்டீரியா திரிபிற்கு மெத்திலோபாக்டீரியம் அஜ்மலி (Methylobacterium ajmalii ) என்று பெயரிட்டனர்.
மெத்திலோபாக்டீரியம் அஜ்மலி வகை பாக்டீரியா மரபணு பகுப்பாய்வில், தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் மரபணுக்கள் அதில் உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது
இருப்பினும், விண்வெளி விவசாயத்திற்கான ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கமா என்பதை நிரூபிக்க மேலும் பல பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாசாவின் ஜேபிஎல் உடன் இணைந்து மேலும் அற்புதமான கண்டுபிடிப்புகளை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் மிகவும் ஆவலுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
ALSO READ | இஸ்ரேல் தேர்தலில் இழுபறி நிலை; கிங் மேக்கராக உருவெடுக்கும் Raam
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR