கொரோனாவை விரட்ட எம தர்ம ராஜனுடன் வந்த காவல்துறையினர்...

முழு அடைப்பின் போது மக்கள் தங்கள் வீடுகளுக்குள் தங்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில்., ஆந்திர பிரதேச காவல்துறை தற்போது புதுமையான யுக்தியை கையாண்டு வருகிறது.

Last Updated : Apr 1, 2020, 08:28 PM IST
கொரோனாவை விரட்ட எம தர்ம ராஜனுடன் வந்த காவல்துறையினர்... title=

முழு அடைப்பின் போது மக்கள் தங்கள் வீடுகளுக்குள் தங்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில்., ஆந்திர பிரதேச காவல்துறை தற்போது புதுமையான யுக்தியை கையாண்டு வருகிறது.

பாடுவது முதல் நாவல் கொரோனா வைரஸ் போல தோற்றமளிக்கும் ஹெல்மெட் அணிவது வரை, காவல்துறை அதிகாரிகள் நிலைமையின் தீவிரத்தை மக்களுக்கு புரிய வைக்க பல்வேறு வகையில் முயற்சித்து வருகின்றனர். ஆனால் ஆந்திர மாநில காவல்துறை இந்த விஷயங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

கொரோனா முழுஅடைப்பின் விதிகளை மீறி வீட்டில் இருந்த வெளியே வரும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆந்திர காவல்துறையினர் புதன்கிழமை, சித்ரகுப்தர் மற்றும் எம தர்ம ராஜாவையும் சாலைக்கு அழைத்து வந்தனர். 

கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் ரெட்டி, கொரோனா விழிப்புணர்வை உருவாக்க நாடகக் கலைஞரின் உதவியைப் பெற்றுள்ளார். இந்த விழிப்புணர்வு நாடகத்தில் கலைஞர்கள் பாலிஜா, சங்கர் மற்றும் சேகர் ஆகியோர் பங்கேற்று மக்களுக்கு விழிப்புரணவு ஏற்படுத்தியுள்ளனர்.

தற்போதை இணையத்தில் வைரலாகி வரும் இந்த 24 விநாடி வீடியோவில் எமராஜன் உடையணிந்த ஒருவர் காவல்துறை வண்டியின் பொன்னட்டில் அமர்ந்திருப்பதைக் காணலாம். அவருடன் சித்ரகுப்தா மற்றும் அரக்கன் என இருவர் மரணத்தை சித்தரிக்கும் விதமாக பயணிக்கின்றனர். 

அந்த வீடியோவில், "நீங்கள் வீட்டிற்குள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் தாராளமாக இருங்கள், உங்கள் கர்மா மோசமாக இருந்தால் சாலைகளுக்கு வாருங்கள், மக்கள் பாவங்களை பதிவு செய்யும் சித்ரகுப்தர், உங்கள் பாவங்களை பதிவு செய்யத் தயாராக உள்ளார், அவரும் மக்கள் தங்கள் குடும்பத்துடன் உள்ளே இருக்க அறிவுறுத்துகிறார்." என்று கதாப்பாத்திரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Trending News