Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
திருமண வீடியோகளுக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நாடு முழுதும் நடக்கும் திருமணங்களில் நடக்கும் பல வித வேடிக்கையான நிகழ்வுகளை இந்த வீடியோக்களின் மூலம் காண முடிகின்றது. சமீபத்தில் ஒரு திருமண வீடியோ வைரலாக பரவி வருகின்றது. இதில் வினோதமான ஒரு காட்சியை காண முடிகின்றது. இப்படிப்பட்ட காட்சியை எந்த திருமணத்திலும் யாரும் பார்த்திருக்க முடியாது என்றே கூற வேண்டும்.
வீடியோவில் மணமகனும் மணமகளும் அலங்கார ஆடைகளுடன் மணமேடையில் அமர்ந்திருப்பதை காண்கிறோம். ஆனால் தன் திருமண நிகழ்வை அனுபவிக்காமல் மணமகள் தன் லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருப்பதையும், போனில் பேசிக் கொண்டிருப்பதையும் பார்க்க ஆச்சரியமாக உள்ளது. திருமணத்திற்கு வந்த உறவினர்களையும் நண்பர்களையும் அவர் கவனிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தன் அருகில் அமர்ந்திருந்த மணமகனையே அவர் கண்டு கொள்ளவில்லை.
மேலும் படிக்க | பட்டு எப்படி உருவாகிறது தெரியுமா? இந்த வீடியோவை பாருங்கள்!
இந்த காட்சி நமக்கு மட்டுமில்லாமல் அந்த மணமகனுக்கும் வினோதமாகத் தான் உள்ளது. அவருக்கு அங்கு என்ன நடக்கின்றது என்று ஒன்றுமே புரியவில்லை என்பதை வீடியோவைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடிகிறது. மணமகன் மணமகளையே பார்த்துக் கொண்டிருக்க, மணமகளோ தன் வேலையில் மூழ்கி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்தால் மணமகளின் அர்ப்பணிப்பிற்கு அவரைப் பாராட்ட வேண்டுமா அல்லது மணமகனைப் பார்த்து பரிதாபப்பட வேண்டுமா என்பதே புரியவில்லை. மொத்தத்தில் இந்த வீடியோவை பார்க்க மிகவும் வேடிக்கையாக உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.
மணமேடையில் சீன் போட்ட மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்:
வைரலாக பரவி வரும் இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் official_viralclips என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
'இவ்வளவு சின்சியராக வேலை செய்யும் இந்த மணமகள் எந்த கம்பெனியில் வேலை செய்கிறார்?' என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். 'ஒருவேளை அவர் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி விற்றுக் கொண்டிருக்கிறாரோ?' என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 'வொர்க் ஃப்ரம் ஹோம் போல இது ஒர்க் ஃப்ரம் வெட்டிங் என்று மற்றொருவர் கூறியுள்ளார்.' 'மணமகளின் அர்ப்பணிப்பை பார்த்தால் அவர் UPSC பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருப்பது போல் தெரிகிறது என்று ஒருவர் எழுதியுள்ளார்.
மேலும் படிக்க | முயலை உயிரோடு முழுங்கும் கடல் புறா வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ