வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விலங்குகளுக்கும் பச்சாதாப உணர்வும் இரக்க உணர்வும் இருக்குமா? ஆம்!! கண்டிப்பாக இருக்கும். மற்றவர்களின் உணர்வுகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்றபடி நடக்கும் திறன் மனிதர்களுக்கு மட்டும் இல்லை என்று பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
விலங்குகளும் பலவிதமான உணர்ச்சிகளை உணர்ந்து புரிந்து கொள்ள முடியும். வைரலாகி வரும் ஒரு வீடியோ அதை நிரூபிக்கிறது. சமீபத்தில், ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். தான் பிடிக்க வந்த பறவைக்கு பார்வை இல்லை என்பதை அறிந்த பூனை அதை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது.
மேலும் படிக்க | குழந்தைக்கு பலூனை எடுத்துக்கொடுத்த பூனை - வைரல் வீடியோ
இந்த வீடியோவில், ஒரு இடத்தில் ஒரு புறா இருப்பதையும், அதை இரையாக்கும் நோக்குடன் பூனை ஒன்று அதை நோக்கி மெதுவாக வருவதையும் பார்க்க முடிகின்றது. இருப்பினும், பூனை வருவது தெரிந்தும் புறா நகராமல் இருக்கவே, புறாவால் பார்க்க முடியவில்லை என்பதை பூனை புரிந்துகொள்கிறது.
இதன் பிறகு பூனை செய்யும் வேலை இணையவாசிகளை இளக வைத்துள்ளது. புறாவுக்கு பார்வை இல்லை என்பதை தெரிந்துகொண்ட பூனை தனது மனதை மாற்றிக் கொள்கிறது. பூனையின் இந்த மனமாற்றம் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இணையவாசிகளை இளக வைத்த பூனையின் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ சமூக ஊடக பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பல இணையவாசிகள் பூனை காட்டிய கருணைக்காக அதை பாராட்டி வருகிறார்கள். விலங்குகளிடம் இருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகமாக உள்ளன என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“இது கருணைக்கு ஒரு சிறந்த உதாரணம். எதிரே உள்ள இரை உதவியற்றதா, பலவீனமானதா அல்லது உடல் ஊனமுற்றதா என்று தெரிந்தால் விலங்குகள் கூட தாக்காது. மனிதர்களாகிய நாம் விலங்குகளிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.” என்றும் ஒருவர் எழுதியுள்ளார்.
“விலங்குகளுக்கும் கொள்கைகள் உள்ளன. அவற்றில் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன” என்றும் ஒரு பயனர் கூறியுள்ளார்.
இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது மட்டுமல்லாமல், அவர்களது உணர்வுகளையும் தூண்டியுள்ளது.
மேலும் படிக்க | இந்த புத்துக்கு யாரும் பால் ஊத்த மாட்டீங்களா: கொட்டாவி விட்டு காத்திருக்கும் பாம்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR