பெண்ணை தாக்கும் காட்டு யானை: பதபதைக்க வைக்கும் வீடியோ

மைசூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கிய ஒரு காட்டு யானை யின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 27, 2022, 05:23 PM IST
  • சாலைக்கு வந்த காட்டு யானை.
  • சாலையில் சென்ற பெண் தாக்கப்பட்டார்.
  • பெண்ணை தாக்கிய வீடியோவால் பரபரப்பு.
பெண்ணை தாக்கும் காட்டு யானை: பதபதைக்க வைக்கும் வீடியோ title=

மைசூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கிய ஒரு காட்டு யானையின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது. யானையால் தாக்கப்பட்ட அந்த கூலி தொழிலாளி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை காட்டு யானை தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே நாகர்ஹோலே வனப் பகுதியை ஒட்டியுள்ள கடாஞ்சி கிராமத்தின் அருகே ஒரு காட்டு யானை புகுந்துள்ளது.

காட்டு யானையை பார்த்த பொதுமக்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். யானையைக் கண்டதும் சாலையில் வேகமாக நடந்துசெல்ல முயன்ற ஒரு பெண்ணை பின்புறம் வேகமாக வந்த காட்டு யானை தாக்கியது. இந்த காட்சிகளை அந்த பகுதியில் உள்ள சிலர் படம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த வீடியோவை இங்கே காணலாம்:

கடந்த சில நாட்களாக நாகர்ஹோலே வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தஞ்சமடைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க | சாலையில் ஒய்யாரமாய் யானை, பீதியில் வாகன ஓட்டிகள்: வீடியோ வைரல் 

நேற்று மாலை கடாஞ்சி பகுதியை ஒட்டியுள்ள  கிராமத்தின் அருகே பலர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அந்தப் பகுதிக்கு ஒற்றை காட்டு யானை வந்தது. இதனை பார்த்த விவசாயிகள் ஓட்டம் பிடித்தனர். அப்போது இந்த சம்பவம் அரங்கேறியது. பின்னர் அந்த பகுதிக்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை பொதுமக்கள் உதவியுடன் காட்டு பகுதிக்கு விரட்டியடித்தனர்.

யானைகள் இப்படி சாலைகளை வழிமறிப்பதும், பொது மக்களை காயப்படுத்துவதும் தற்போது பல இடங்களில் அடிக்கடி நடக்கிறது. காலை மற்றும் இரவு நேரங்களிலும் தண்ணீர் உணவு தேடி, காட்டுப்பகுதிகளைக் கடந்து சாலைகள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வரும் யானைகள் சில சமயம் மக்களுக்கு தீங்கிழக்கும் செயல்களையும் செய்து விடுகின்றன. 

இப்படிப்பட்ட சமயங்களில் மக்கள் உடனடியாக வனத்துறையினரை நாடி உதவி பெறுகிறார்கள். வனத்துறை அதிகாரிகள் சாதுர்யமாக யானைகள் மற்றும் பிற விலங்குகளை அவற்றின் இருப்பிடம் நோக்கி அனுப்பி வைக்கும் பல வீடியோக்களையும் நாம் சமீப காலங்களில் அதிகமாக பார்த்து வருகிறோம்.

மேலும் படிக்க | ஒய்யாரமாய் உலாவந்த ஒற்றையானை: அச்சத்தின் உச்சிக்கு போன வாகன ஓட்டிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News