வம்பிழுத்து சண்டைக்கு போவது என்பது மனிதர்களாகிய நம்மிடம் இருக்கும் குணாதியம் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை இன்று முதல் மாற்றிக் கொள்ளுங்கள். விலங்குகளும் வம்பிழுந்து சண்டை செய்யும். படிப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இந்த வீடியோவை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், உண்மை என்று நீங்கள் நிச்சயம் நம்புவீர்கள். வனப்பகுதி ஒன்றில் பசும் புல் தரையில் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டெருமை ஒன்றை, அங்கு வரும் குட்டியானை வேண்டுமென்றே வம்பிழுந்து ஓடவிட்டுள்ளது.
மேலும் படிக்க | ஏப்ரலில் ஏலத்துக்கு வரும் உலகின் விலை உயர்ந்த அபூர்வ வைரம்..!
இணையத்தில் பதிவிடப்பட்டிருக்கும் அந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில், பசுமையான புல் தரையில் காட்டெருமை மேய்ந்து கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அங்கு வரும் குட்டியானை ஒன்று, காட்டெருமையை பார்த்தவுடன் ஆவேசம் கொண்டு, அது மேயும் இடத்தை நோக்கி வேகமாக ஓடுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத காட்டெருமை, யானை வருவதை பார்த்து இரண்டு அடி நகர்கிறது.
tusker & Indian Gaur at one frame.Vc - saran pic.twitter.com/I2uS0oQ5Iu
— Kishore Chandra (@Kishore36451190) February 16, 2022
ஆனால் காட்டு யானை அதனை வேண்டுமென்றே துரத்துகிறது. அந்த இடத்தில் மேயக்கூடாது என்பதற்கு துரத்துகிறதா? அல்லது இரண்டுக்கும் இடையே ஏதேனும் முன்பகை இருந்ததா? என்றெல்லாம் தெரியாது. பார்ப்பதற்கு குட்டி யானையாக இருந்தாலும், வலுவாக தெரியும் காட்டெருமையை விடாப்பிடியாக ஓடவிடுகிறது. பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் வகையில் இந்தக் காட்சி இருப்பதால், இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
மேலும் படிக்க | மூட்டை மூட்டையாய் சில்லறையுடன் ஸ்கூட்டர் வாங்க சென்ற நபர்! அதிர்ந்த நிறுவனம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR