இலவச வைஃபை வழங்கும் டிரைவர் அப்துல் காதர்! மினி சூப்பர் மார்கெட் டாக்ஸி வைரல் வீடியோ

FREE WiFi in Cab: இலவசமாக வைஃபை இணைப்பு வழங்கும் டாக்ஸி டிரைவர் வைரலாகிறார். மினி சூப்பர்மார்க்கெட்டாக இருக்கும் டாக்ஸியை பார்த்ததுண்டா? இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2023, 07:37 PM IST
  • டாக்ஸி பயணத்தை சொகுசாய் மாற்றிய டிரைவர்
  • வாடகைக் காரை வித்தியாசமாய் மாற்றிய டாக்ஸி டிரைவர்
  • வாடகைக் கார் வைரல் வீடியோ
இலவச வைஃபை வழங்கும் டிரைவர் அப்துல் காதர்! மினி சூப்பர் மார்கெட் டாக்ஸி வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்கள் இன்று நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்த அங்கமாகிவிட்டன. ஒரு காலத்தில் திரைப்படம் மட்டுமே பொழுதுபோக்கு என்று இருந்த நிலை இன்று மாறி, அது பின்னுக்கு தள்ளப்பட்டு, நம் கைக்குள்ளேயே பொழுதுபோக்கு உலகம் சுருங்கிவிட்டது. பரந்து விரிந்த உலகத்தை இணைய வசதிகள், நமது கைக்குள் அடக்கிவிட்டாலும், அது ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ள இணையம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள உதவுகிறது.

இறுக்கத்தை தளர்த்திக் கொள்ள மட்டுமல்ல, உலகம் எப்படி மாறிவிட்டது என்பதையும், வசதிகளும் வாய்ப்புகளும் எப்படி மாறிவிட்டன என்பதையும் நாம் இணையத்தின் உதவியுடன் தெரிந்துக் கொள்ள முடிகிறது. பயணிக்க சொந்த கார் என்ற நிலை மாறி, வாடகைக்காரை அதிகம் பயன்படுத்தும் இன்றைய காலகட்டத்தில், ஊபர், ஓலா, ரெட் டாக்ஸி என வாடகைக்கு வாகனங்களை விடும் நிறுவனங்கள் தொழிலில் சக்கைப்போடு போடுகின்றன.

மேலும் படிக்க | Viral Video: ஸைபடர்மேன் அவதாரம் எடுத்து... மிரள வைத்த மியாவ் பூனை...!

இந்த சேவைகளை இன்று நகரங்களில் இருக்கும் பலரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வாடகைக் கார் பயணத்தை எப்படி இனிமையானதாக, சொகுசாக மாற்ற முடியும் என்பதை காட்டும் ஒரு வீடியோ டிரெண்டிங்க் ஆகிறது. 

ஆச்சரியப்படுத்தும் இந்த வீடியோவில் பயணிக்கும் பெண் அதிசயக்கிறார். அவர் வாடகைக்கு எடுத்த கார், உண்மையில் ஒரு மினி சூப்பர் மார்க்கெட் போல இருக்கிறது. அந்த டாக்ஸி டிரைவர் இலவசமாக வைஃபை இணைப்பு வழங்குகிறார். அதோடு, தின்பண்டங்கள், குளிர்பானங்கள் என உங்களுக்கு தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ள வசதியாக பொருட்களையும் அடுக்கி அதை ஒரு மொபைல் கடையாகவும் மாற்றியிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்து டாக்ஸியில் என்னென்ன பொருட்கள் எப்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த வீடியொ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் radha__pundir என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

வைரல் வீடியோ

நகர வாழ்க்கையின் பரப்பில் ஒரு இடத்திற்கு செல்வதற்கு தனியார் வாகன சேவையை பயன்படுத்தும் அனைவருக்கும் இதுவொரு புது அனுபவமாக இருக்கும். இந்த சேவையை செய்துவரும் டெல்லியில் உள்ள கால்டாக்சி ஓட்டுநரான அப்துல் காதர், வழக்கமான வண்டி அனுபவத்தை தனது பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான பயணமாக மாற்றியுள்ளார்.

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

இலவச இனைய இணைப்பு, குளிர் பானங்கள், தின்பண்டங்கள், ஷூ பாலிஷ், பொது மருந்துகள்என பல அம்சங்களை தனது சேவையின் ஒரு பகுதியாக வழங்கும் அப்துல் காதரின் டாக்ஸியில் ஒரு முறை பயணித்தால், அடுத்த முறை அவரது கிடைக்காதா என்று எங்கும் அளவுக்கு வசதியை செய்து வைத்திருக்கிறார். 

சமீபத்தில், இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் கதீரின் டாக்ஸியைக் காண்பிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், காதரின் வித்தியாசமான முயற்சிக்காகவும், பொதுமக்களின் சேவையில் காட்டும் அக்கறையையும் பாராட்டினார். இந்த வீடியோ 4.6 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.

தனித்துவமான டாக்ஸியில் பயணிக்கும் அனுபவத்தைத் தரும் டிரைவர் அப்துல் காதருக்கு நெட்டிசன்களின் பாராட்டுகள் வந்து குவிந்துக் கொண்டே இருக்கிறது.  

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | கல்யாண போட்டோஷூட்! இப்பவே லிப்-டு-லிப்பா? மணமக்களின் காதல் லீலை வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News