Indian Food: முதன்முறையாக இந்திய உணவை சாப்பிட்ட நைஜீரியரின் வீடியோ வைரல்

உணவு சுவையாக இல்லாவிட்டால், பணம் செலுத்தப் போவதில்லை என்று சொன்னவர், இரு மடங்கு பணம் செலுத்த தயாராக வைத்த இந்திய உணவு...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 29, 2021, 12:31 PM IST
Indian Food: முதன்முறையாக இந்திய உணவை சாப்பிட்ட நைஜீரியரின் வீடியோ வைரல் title=

முதல் முறையாக இந்திய உணவை சாப்பிட்ட நைஜீரிய மனிதரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

முதன்முறையாக இந்திய உணவை சுவைப்பவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. டக்கரா ரே மற்றும் லம்போகின்னி தம்பதிகள், இந்திய உணவை முயற்சித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலாகிறது.

 

இந்த ஜோடி அமெரிக்காவின் கனெக்டிகட்டில் உள்ள பொனானி டேக் அவுட் இந்தியன் கிச்சன் (Bonani Take Out Indian Kitchen in Connecticut) என்ற உணவகத்திற்கு சென்றது. அவர்கள் சாதம் மற்றும் பராத்தாவை சாப்பிட்டனர்.  

Also Read | Life vs Fate: டெலிவரி ஆளாக மாறிய அமைச்சர், கதையல்ல நிஜம்!

Lamb Vindaloo என்ற உணவுக்கும் ஆர்டர் கொடுத்த தம்பதியினர், இந்த உணவு சுவையாக இல்லாவிட்டால், பணம் செலுத்தப் போவதில்லை என்று பணியாளரிடம் தெரிவித்தார். அவருக்கு பதிலளித்த உணவகப் பணியாளர், இது ருசியான உணவு, இனிப்பாக இருக்காது, ஆனால் கொஞ்சம் காரமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

ஆனால் உணவை ஒரு வாய் சாப்பிடவுடன், மேலும் சாதம் வாங்கிய லம்போகின்னி, "நான் ஏற்கனவே ஒரு இந்திய உணவுப் பிரியன், இந்த உணவு என்னை மேலும் ருசிக்கு அடிமையாக்குகிறது" என்று சொல்லிவிட்டு, உணவை சாப்பிட்ட வீடியோ வைரலாகிறது. 

"முதலில் பணம் கொடுக்கமாட்டேன் என்று சொன்னவர், பிறகு உணவுக்கான விலையைவிட இரு மடங்கு பணம் செலுத்தப் போகிறேன்," என்று தெரிவித்தார். அவருக்கு உணவை மிகவும் பிடித்துவிட்டது. திருப்தியாக உணவை சாப்பிட்ட அவர், மேலும் சில உணவு வகைகளை வாங்கிச் சென்றார்.  

READ ALSO | கொரோனா பாதிப்பு இருந்தபோது உணவுப்பொருட்கள் மீது துப்பிய பெண்ணுக்கு சிறை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News