சுவாரசியமான தகவல்: குழந்தைக்கு HTML என பெயர் வைத்த வடிவமைப்பாளர்

"நான் எனது வேலையையும் எனது பணியையும் மிகவும் நேசிக்கிறேன். இதைக் கருத்தில் கொண்டு, எனது மகனுக்கு HTML என்று பெயரிட்டுள்ளேன்" 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 22, 2021, 11:34 PM IST
சுவாரசியமான தகவல்: குழந்தைக்கு HTML என பெயர் வைத்த வடிவமைப்பாளர் title=

மணிலா: சிலர் தங்கள் குழந்தைக்கு தங்களுக்கு பிடித்த நடிகர், கிரிக்கெட் வீரர் அல்லது குருவின் பெயரை வைப்பது வழக்கம். இதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பிலிப்பைன்ஸில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இப்போது, இதைப்பற்றி தான், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு பெரிய சேனலிலும் செய்தித்தாளிலும் விவாதிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் வசிக்கும் வடிவமைப்பாளரான (Designer) மேக், தனது குழந்தைக்கு HTML என பெயரிட்டுள்ளார். இது வலைப்பக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு குறியீடு. நீங்கள் ஒரு வலைத்தளத்தைப் பார்வையிடும்போது இந்த குறியீடை காணலாம்.

இது குறித்து குழந்தையின் தந்தை மேக்கிடம் (Mac) கேட்கப்பட்டபோது, ​​"நான் எனது வேலையையும் எனது பணியையும் மிகவும் நேசிக்கிறேன். இதைக் கருத்தில் கொண்டு, எனது மகனுக்கு HTML என்று பெயரிட்டுள்ளேன்" என்று கூறினார். இருப்பினும், மேக்கின் இந்த சிந்தனை குழந்தையை ஒரே இரவில் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது. 

 

எச்.டி.எம்.எல் (HTML) என குழந்தைக்கு பெயர் வைக்கலாம் என அவரது அத்தை கூறியதாகக் கூறப்படுகிறது. 

ALSO READ |  Raai Laxmi: வைரலாகும் நடிகை ராய் லக்ஷ்மியின் பிகினி புகைப்படங்கள்

அவரது அத்தை தனது பேஸ்புக் பக்கத்தில், "HTML உங்களை இந்த உலகம் வரவேற்கிறது" எனப் பதிவிட்டுள்ளார். இதற்குப் பிறகு குழந்தையின் பெயரை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேஸ்புக் இடுகையை விரும்பியுள்ளனர். அதே நேரத்தில் 2.2 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ALSO READ |  Watch viral video: மதுபாட்டில்களை கும்பிட்டு குடிக்கத் தொடங்கும் மதுரை குடிமகன்

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News