பிரியங்கா சோப்ரா-வின் வைர மோதிரம்; விலை என்ன தெரியுமா!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா-வின் நிச்சைய மோதிரம் என கிசுகிசு-க்கப் பட்ட வைர மோதிரத்தின் விலை ரூ.1.4 கோடி என தகவல் வெளியாகியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2018, 04:25 PM IST
பிரியங்கா சோப்ரா-வின் வைர மோதிரம்; விலை என்ன தெரியுமா! title=

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா-வின் நிச்சைய மோதிரம் என கிசுகிசு-க்கப் பட்ட வைர மோதிரத்தின் விலை ரூ.1.4 கோடி என தகவல் வெளியாகியுள்ளது!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனசும் காதலித்து வருவதாக நெடுநாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில், இவர்கள் இருவருக்கு லண்டனில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், தான் ஒப்ந்தமாகியுள்ள திரைப்பட படபிடிப்பு நிமித்தமாக லண்டன் சென்றிருந்த பிரியங்கா லண்டனிலிருந்து சமீபத்தில் டெல்லி திரும்பினார். 

அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கு முன் அவர் தன் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி, பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்தார். இந்த மோதிரம் அவரது நிச்சயதார்த்த மோதிரமாக இருக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டது. 

இதன் காரணமாக பிரியங்கா சோப்ரா, தமது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி மறைத்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது. எனினும் இந்த மோதிரம் குறித்து பிரியங்கா தரப்பில் இருந்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த மோதிரம் குறித்த ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது... சோப்ரா-வின் நிச்சைய மோதிரம் என கிசுகிசு-க்கப்பட்ட இந்த வைர மோதிரத்தின் விலை ரூ.1.4 கோடி என தெரிகிறது.

Trending News