வெளியானது "லேடிஸ் அண்ட் ஜென்டில்வுமன்" டீஸர்!

மாலினி ஜீவரத்னம் இயக்கியக்கத்தில் உருவாகியுள்ள "லேடிஸ் அண்ட் ஜென்ட்ல்வுமன்" ஆவணப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

Last Updated : Jan 17, 2018, 04:53 PM IST
வெளியானது "லேடிஸ் அண்ட் ஜென்டில்வுமன்" டீஸர்! title=

மாலினி ஜீவரத்னம் இயக்கியக்கத்தில் உருவாகியுள்ள "லேடிஸ் அண்ட் ஜென்ட்ல்வுமன்" ஆவணப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

தமிழ் திரைபடங்களில் சொல்லப்படாத, சொல்ல முன்வராத கதை களத்தினை படக்குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படம் திஜா மற்றும் பிஜா என்னும் இரண்டு லெஸ்பியன் காதலர்கள் குறித்த கதையாகும். இயக்குனர் பா.ரஞ்ஜித் இப்படத்தினை தயாரிக்கின்றார்.

படக்குழுவினர் வெளியிட்டுள்ள டீஸரில் இரண்டு குரல்கள் பேசிக்கொள்வது போலும், அதில் பெண் குரல் ராஜா-ராணி கதை கூற இது பழைய கதையென ஆண் குரல் கூறுகிறது. பின்னர் அக்குரை ராணி-ராணி கதையை கூறுகிறது. சற்று மாற்றுவிதமாக படக்குழுவினர் படத்தினை ப்ரமோட் செய்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைகின்றார், பிரவின் பாஸ்கர் எடிட்டிங் செய்கின்றார். இத்திரைப்படம் நோர்வே தமிழ் திரைப்பட விழா மற்றும் புனே சர்வதேச குயர் திரைப்பட விழாவில் அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது!

 

Trending News