ஏய் நீ சிங்கம்டா: மியாவ் சொல்லக்கூடாது: எப்படி கர்ஜிப்பது சொல்லிக்கொடுக்கும் தாய்

Cutest Sounds Ever: எப்படி கர்ஜிப்பது? கற்றுக்கொள்ளும் சிங்கக் குட்டி. ஆனால் கர்ஜிக்க முடியாமல் க்யூட்டாக பூனையைப் போல் மியாவ் சொல்லும் சிங்கக் குழந்தை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 26, 2022, 07:02 PM IST
  • எப்படி கர்ஜிப்பது? கற்றுக்கொள்ளும் சிங்கக் குட்டி
  • பூனையைப் போல் மியாவ் சொல்லும் சிங்கக்குட்டி வீடியோ
  • சிங்கமா இருந்தாலும் இப்படித்தான் கர்ஜிப்பேன் அடம் பிடிக்கும் சிங்கக் குழந்தை
ஏய் நீ சிங்கம்டா: மியாவ் சொல்லக்கூடாது: எப்படி கர்ஜிப்பது சொல்லிக்கொடுக்கும் தாய் title=

வைரல் வீடியோ: சிங்கம் எப்படி கர்ஜிக்கும் என்று யோசித்தாலே கம்பீரமான உறுமல் ஒலி அனைவரின் காதுகளிலும் ரீங்காரமிடும். ஆனால் சிங்கத்தின் கர்ஜனை பூனையின் ‘மியாவ்’ போல மென்மையாக இருக்க முடியுமா?

ஒரு சிங்கக் குட்டி கர்ஜிக்க முயற்சிக்கும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அந்த வீடியோவில், கர்ஜிக்கக் கற்றுக் கொள்ளும்போது, சிங்கக் குட்டியின் குரல் பூனையைப் போல இருப்பதால் இந்த காணொளியை அனைவரும் கண்டு மகிழ்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு பிடித்த வீடியோவை உடனடியாக பகிர்வதால் பலரும் அதைப் பார்த்து பகிர்வது என பகிர்தல் தொடர்ந்தால், வீடியோ வைரலாகிறது. உறும கற்றுக்கொள்ளும் சிங்கத்தின் கர்ஜனையின் தொடக்கம் எப்படி அழகாக இருக்கிறது என்று காட்டும் க்யூட் வீடியோ இது.

வைரலான வீடியோசூப்பர் க்யூட்டாக இருக்கிறது இல்லையா?

மேலும் படிக்க | ரிங் மாஸ்டரை பின்னி பெடலெடுக்கும் சிங்கம்: வீடியோ வைரல்

குழந்தை சிங்கம் வீடியோ வைரல்
சிங்க கர்ஜனைகள் பிராந்தியத்தை அடையாளப்படுத்தவும், தொலைதூரத்தில் உள்ள தங்கள் சகாக்களை கண்டறியவும் சிங்கங்களின் கர்ஜனையே பயன்படுகின்றன.

ஆண் மற்றும் பெண் சிங்கங்கள் கர்ஜனை மூலம் தங்களுடைய அதிகார எல்லையை வகுத்துக்கொள்கின்றன. பிற குழுக்களிடமிருந்து கேட்கப்படும் கர்ஜனைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் காட்டு ராஜா கூட்டத்தின் வலிமையை அளவிட முடியும்.

மேலும் படிக்க | இவ்வளவு சீற்றம் உடம்புக்கு நல்லதில்ல காட்டு ராஜா

பிறந்த ஒரு சிங்கக் குட்டி முதலில் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை கர்ஜிக்கிறது. தன்னை பெரிய சிங்கம் போல் உணர வைப்பதற்காக முடிந்தவரை அடிக்கடி கர்ஜித்து பழகிக் கொண்டிருக்கும்.

பிறப்பில் சிங்கமாக இருந்தாலும் பழகப் பழகத்தான் அதன் இனத்திற்குரிய கர்ஜனைக் குரல் வரும். குழந்தையாக இருக்கும் சிங்கத்தின் குரலும் மென்மையாக இருக்கும். அதற்கு காரணம், தொண்டையில் கொழுப்பு மெத்தை இருக்காது என்பதும், அவற்றின் குரல் நாண்கள் சிறியவை, பத்தில் ஒரு அங்குலத்திற்கும் குறைவாக இருக்கும்.

ஒரு குட்டி சிங்கக் குட்டி தனது தாயைச் சுற்றி விளையாடிக் கொண்டே கர்ஜிப்பதைக் கற்றுக் கொள்ளும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | கர்ஜனையால் காட்டை உலுக்கும் சிங்கம்: குரலால் அதிகாரம் செய்யும் காட்டு ராஜா

இந்த கிளிப் ட்விட்டரில் 'Buitengebieden' என்ற பக்கத்தில் வெளியாகியுள்ளது, இந்த டிவிட்டர் பக்கம், விலங்குகளின் அழகான மற்றும் வேடிக்கையான வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறது.

"ஒரு வலிமையான கர்ஜனைக்கான பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது," என்று தலைப்பிடப்பட்ட இந்த வீடியோ இதுவரை கிட்டத்தட்ட 27 ஆயிரம் பார்வைகளையும் 16 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

ஒரு சிங்கக் குட்டி கர்ஜிக்க முயற்சிப்பதை வீடியோ காட்டுகிறது, ஆனால் அதற்குப் பதிலாக, பூனையின் 'மியாவ்' போன்ற அழகான ஒலிகளை அது எழுப்புவது பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. சிங்கம் தனது குழந்தையை பார்த்துக் கொள்வதையும் பார்க முடிகிறது.  

மேலும் படிக்க | பாம்புத் தோல் உரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News