சென்னை: மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை முழுவதுமே கடந்த இரு தினங்களாக மழை கொட்டி வருகிறது. சென்னையில் விடாது பெய்த அடை மழையால் சென்னை நகரமே வெள்ளத்தில் மிதந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகளும் ஆறாக பெருக்கெடுத்து ஓடின. பலத்த மழை பெய்த நிலையில், சாலையில் ஓடும் முழங்கால் அளவு நீரில் நடக்க முடியாமல் படகுகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு விட்டது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்க புயல் மிக்ஜாம் சென்னையை கடந்துவிட்டாலும், அதன் பாதிப்புகள் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் மனம் நொந்து போகும் மனிதர்களுக்கு, மனிதாபிமான உதவிகள், மனிதநேயம் இன்னும் மடிந்து போய்விடவில்லை என்ற ஆறுதலைக் கொடுக்கும்.
மனிதர்களுக்கு மட்டுமா சென்னை மழையின் பாதிப்புகள் இயல்பு வாழ்க்கையை முடக்கியது? விலங்குகள், பறவைகள் என அனைவரும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழையில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களைத் தவிர, பலரும் தானாக முன்வந்து உதவிகளை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | அன்புள்ள சென்னை மேயருக்கு! விஷால் எழுதிய மிக்ஜாங் புயல் பிரச்சனை வீடியோ வைரல்
அப்படி ஒரு மீட்பு வீடியோ வைரலாகிறது. மழை வெள்ளத்தில் சிக்கிய விலங்குகள் மீட்கப்படும் காட்சி இணையதளங்களில் வெளியாகி பலரின் பாராட்டுக்களையும் பெறுகிறது.
வைரல் வீடியோ
விலங்குகளை கிண்டல் செய்வது தொடர்பாக வெளியாகும் வீடியோக்கள் வைரலாகி வரும் சமூக ஊடகங்களில் இதுபோன்ற விலங்குகளை மீட்கும் பணிகளுக்கும் பாராட்டுகள் கிடைப்பதோடு, அவை பலரால் பகிரப்பட்டு வைரலாகின்றன.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மக்கள் வரலாறு காணாத வகையில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமூக ஊடகங்கள் மூலமாகவே பலரும் வெளியுலகத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | 2015 செயற்கை வெள்ளம்... இது இயற்கை வெள்ளம் - ஸ்டாலினின் விளக்கம் என்ன?
இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன என்றால், இதுபோல இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும்போதும் மக்களுக்கு சமூக வலைதளங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ