புதுடெல்லி: அணிவகுப்புகள் பலவிதம். எந்த அணிவகுப்பாக இருந்தாலும் பார்த்து ரசிக்கத் தூண்டுபவை. அதிலும் துள்ளி குதிக்கும் மான்கள் முறையாக வரிசை கட்டி அணி வகுத்து செல்வதை பார்க்க பரவசமாக இருக்கிறது.
குஜராத்தின் பாவ்நகரில் சாலை ஒன்றை கடந்து செல்லும் 3000 க்கும் மேற்பட்ட பிளாக்பக் என்னும் புல்வாய் இன மான்களின் வீடியோவை பிரதமர் மோடி தாந்து டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
விலங்குகள் மீது விருப்பம் கொண்ட பிரதமர், டிவிட்டரில் இந்த வீடியோவை பார்த்தும் தனது கணக்கிலும் ரீட்வீட் செய்துள்ளார். குஜராத் மாநில அரசின் தகவல் துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த அற்புதமான வீடியோ முதலில் பகிரப்பட்டது.
குஜராத் மாநில அரசின் டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த துள்ளியோடும் மான்கள் வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்துக் கொண்ட பிரதமர் மோடி, “அருமை” என்ற தலைப்பில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
Over 3000 blackbucks were seen crossing the road at Bhavnagar's Blackbuck National Park.
— Gujarat Information (@InfoGujarat) July 28, 2021
பாவ்நகரின் பிளாக்பக் தேசிய பூங்காவில் இந்த கண்கவர் காட்சி படமாக்கப்பட்டது. பிளாக்பக் என்னும் புல்வாய் சாலையைக் கடக்கும் போது அவை துரிதமாக செல்வதும் ஒரே சீராக தாளகதியில் ஒன்றாக அணிவகுத்து செல்வதை பார்க்க முடிகிறது.
இந்த மான் கூட்டத்தில் 3,000 க்கும் மேற்பட்ட மான்கள் இருந்தன, அவை சாலையில் செல்லுபோதும் சரி, காற்றில் பறந்து செல்லும்போதும் சரி ஒரே சீராக செல்வது ஆச்சரியத்தை அளிக்கிறது.
பசுமையான புல்வெளியில் விரைவாக துள்ளி ஓடும் மான்கள், சிமெண்ட் போட்ட சாலையை கடக்கும்போது பறவையைப் போல காற்றில் பறக்கின்றன. அதிலும் கூட்டமாக மான்கள் பறப்பது பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.
Also Read | 160 அடி உயரத்தில் டிக்டாக் வீடியோ எடுத்த பெண் கீழே விழுந்து மரணம்
பிரதமர் பகிர்ந்த இந்த வீடியோ 8000க்கும் அதிகமான ரீட்வீட் மற்றும் 61 ஆயிரம் லைக்குகள் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல, இந்த வீடியோ சுமார் ஏழு லட்சம் முறை பார்க்கப்பட்டு வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியப்பட்ட ஒரு டிவிட்டர் பயனர், ”இந்த ஆண்டின் சிறந்த படம்! மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது! சாலையில் செல்லும் ஒழுக்கத்தை எவ்வளவு அற்புதமாக பின்பற்றுகின்றன! மனிதர்கள், இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!” என்று எழுதியுள்ளார். மற்றொருவர், “இயற்கை மிகவும் ஆச்சரியத்தை டுக்க்கிறது” என்று கருத்து தெரிவித்தார்.
மழைக்காலங்களில் மான்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதைக் காணலாம். அதிலும் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பூங்காவில் பெருமளவிலான மான்கள் இருக்கின்றன.
மான்களை வேட்டையாடுவதற்கு 1972 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு சட்டத்தின் கீழ் மான் வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மான் வேட்டை என்றால் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.
Also Read | Viral Video: சீனாவில் 300 அடி உயரத்திற்கு வீசும் மணல் புயல்! மக்கள் அவதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.c