Viral Video: சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா? எட்டி உதைத்த குரங்கால் இன்னொரு குரங்குக்கு நேர்ந்த கதி..!

சாப்பாடு கேட்ட குரங்கை மற்றொரு குரங்கு லெப்ட் காலால் எட்டி உதைத்த வீடியோ காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக லைக்குகளையும் பெற்றிருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 20, 2023, 03:42 PM IST
Viral Video: சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா? எட்டி உதைத்த குரங்கால் இன்னொரு குரங்குக்கு நேர்ந்த கதி..! title=

நண்பர்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கும்போது, அடிக்கடி குரங்கு சேட்டை செய்யாதே என சொல்லக் கேட்டிருப்போம். வீட்டில் குறும்பு செய்யும் பிள்ளைகளைக் கூட அம்மா அல்லது அப்பாக்கள் திட்டும்போது குரங்கு சேட்டை அதிகம் பண்ற என சொல்வார்கள். ஆனால் அந்த குரங்கு சேட்டையை எத்தனை பேர் நேரில் பார்த்திருப்பீர்கள் என தெரியாது. இங்கே பார்க்க உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. குரங்கு சேட்டை இப்படி தான் இருக்குமோ என நிச்சயம் நீங்கள் எண்ணி சிரிக்கலாம். jayprehistoricpets என்ற பக்கத்தில் குரங்கு வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குரங்குகள் அமைதியாக எதையோ சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க | கரணம் தப்பினால் மரணம்! வீடியோ பார்ப்பவர்களிடம் எல்லாம் திட்டு வாங்கும் வைரல் இளைஞர்

திடீரென ஒரு குரங்கு தான் சாப்பிட்டு முடித்தவுடன் மற்றொரு குரங்கிடம் அது வைத்திருக்கும் உணவை கேட்கிறது. விருப்பப்பட்டால் கொடுக்கலாம் இல்லையென்றால் இல்லை என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த குரங்கு அப்படியெல்லாம் ஏதும் செய்யாமல் தன்னுடைய இடது காலால் மற்றொரு குரங்கை எட்டி உதைக்கிறது. அந்த குரங்கு இப்படி நடக்கும் என சிறிதும் நினைத்து பார்க்கவில்லை. உதைத்தவுடன் குப்புற கீழே கவிழ்ந்து விழுந்துவிட்டது. ஆனால், உதைத்த குரங்கு தான் ஏதும் செய்யாததுபோல் வழக்கம்போல் கையில் இருந்த உணவை சாப்பிடுகிறது.

ரொம்ப குசும்பு பிடித்த குரங்காக இருக்கும்போலும். இந்த வீடியோ ஒரு வாரத்துக்கு முன்பு தான் பகிரப்பட்டுள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் பெற்றிருக்கிறது. வீடியோவை பார்த்த பலரும் குரங்கு சேட்டையை நேரடியாகவே பார்த்துவிட்டோம் என நக்கலாக கமெண்ட் அடித்துள்ளனர். ஒரு சிலர் இதை வைத்து தான் குரங்கு சேட்டை என குறிப்பிடுகிறார்களா? என சிரிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: பேச மட்டும் இல்லை வித்தையும் தெரியும்... பேப்பரில் இறக்கை செய்து அசத்தும் கிளி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News