குடும்பம் என்ற அமைப்பு பலரால் விமர்சனம் செய்யப்பட்டாலும் அந்த அமைப்பால்தான் பலர் நிம்மதியாக இருந்துகொண்டிருக்கின்றனர். இந்த அமைப்பில் ஒருவருக்கு ஒருவர் எப்படி துணை நிற்க வேண்டும், ஒருவரது முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் போன்ற பல விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
ஆனால் குடும்பத்தைவிட்டு விலகி பலர் தனி தீவாகவே வாழ ஆசைப்படுகின்றனர். அப்படி வாழ்பவர்களும் தங்களுடைய கடைசி காலக்கட்டத்தில் நிச்சயம் குடும்பத்தை தேடுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.
மேலும் படிக்க | ஆற்று நீரில் சிக்கிய நாயை மீட்ட இளைஞர்...வைரல் வீடியோ!
பணம் சம்பாதிக்க வேண்டும், வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்ற வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கு குடும்பம் ஆசுவாசம் தரும் இடமாகும்.
அதனை மனிதர்கள் புரிந்துகொள்கிறார்களோ இல்லையோ விலங்குகள் அதிகமாகவே புரிந்துவைத்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் கூடி வாழ்தலின் மகத்துவத்தை விலங்குகள்தான் தற்போது மனிதர்களுக்கு காட்சிப்படுத்தி கற்றுக்கொடுக்கிறது.
Family get-together..pic.twitter.com/x3j7kLa75s
— o̴g̴ (@Yoda4ever) May 30, 2022
அந்த வகையில் குரங்குகள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் இரண்டு குரங்குகள் தங்களது குட்டிகளை முதுகில் சுமந்தபடி வருகின்றன. அருகில் வந்ததும் குட்டிகளை மாற்றிக்கொண்டு கட்டி அளவளாவுகின்றன. இந்த வீடியோவைப் பார்த்த பலர் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
மேலும் படிக்க | வம்புக்கு இழுக்கும் விவகார குழந்தை - வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR