ஓடியாங்கோ, சரக்கு ஃப்ரீயா கிடைக்குது: கவிழ்ந்த லாரி, கும்மாளம் போட்ட குடிமகன்கள், வைரல் வீடியோ

Shocking Viral Video: பாட்டிலகளை எடுக்க மும்முரம் காட்டி அவற்றை எடுத்துச்செல்பவர்களில் பல சிறுவர்களையும் காண முடிகின்றது. இவர்கள் மது பாட்டில்களை தூக்கிக்கொண்டு தங்கள் வீடுகளை நோக்கி ஓடுவதையும் வீடியோவில் காண்கிறோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 31, 2022, 03:32 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஓடியாங்கோ, சரக்கு ஃப்ரீயா கிடைக்குது: கவிழ்ந்த லாரி, கும்மாளம் போட்ட குடிமகன்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம். 

வீடியோவில், ஒரு டிரக் அதன் சமநிலையை இழந்து சாலையில் கவிழ்ந்து இருப்பதை காண முடிகிறது. கழிந்த லாரியை காண ஏராளமானோர் திரண்டனர். ஆனால், அதில் மதுபாட்டில்கள் இருப்பதை அறிந்ததும், அங்கிருந்த குடிமக்களால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. அனைத்தையும் விட்டுவிட்டு லாரியில் இருந்த மதுபாட்டில்களை கொள்ளையடிக்கத் தொடங்கினர். 

இந்த வீடியோவில் பல சிறுவர்கள் மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் செல்வதையும் காணமுடிகிறது. இது மனதுக்கு வேதனையை அளிக்கின்றது. இந்த வீடியோ வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: மண்டை உடையும் அளவு சண்டை போட்ட கணவன் மனைவி, காரணம் என்ன 

மதுபாட்டில் கொள்ளை

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு கிராமத்தின் அருகில் ஒரு லாரி கவிழ்ந்து கிடைப்பதை காண முடிகின்றது. வீடியோவை முதலில் பார்க்கும்போது லாரியை சுற்றி அதிக மக்கள் நிற்பதை பார்த்து விபத்தில் சிக்கியவர்களை காக்க பலர் அங்கு கூடியுள்ளதாக தோன்றுகிறது. 

ஆனால், பின்னர் நாம் காணும் காட்சிகள் நமக்கு அதிர்ச்சியளிக்கின்றன. லாரியில் மது பாட்டில்கள் நிரம்பியுள்ளன. அவற்றை எடுத்துச்செல்லவே பலரும் அங்கு கூடியுள்ளனர். பாட்டிலகளை எடுக்க மும்முரம் காட்டி அவற்றை எடுத்துச்செல்பவர்களில் பல சிறுவர்களையும் காண முடிகின்றது. இவர்கள் மது பாட்டில்களை தூக்கிக்கொண்டு தங்கள் வீடுகளை நோக்கி ஓடுவதையும் வீடியோவில் காண்கிறோம்.  

குடிமகன்கள் கும்மாளம் போட்ட வீடியோவை இங்கே காணலாம்: 

அதிர்ச்சி அளித்த வீடியோ

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதில் இருந்து மக்கள் இந்த காட்சியை மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர். இந்த வீடியோ எங்கிருந்து, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. நாங்கள் இந்த வீடியோவை உறுதிப்படுத்தவில்லை. இந்த வைரலான வீடியோ deepakkulasted என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. 

மேலும் படிக்க | தவழும் பந்தயம்; வைரலாகும் இந்த கியூட் குழந்தையின் கியூட் செயல் வீடியோ  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News