சமூக ஊடகங்கள் பல தகவல்களை, அரிய விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகவும் உதவி வருகிறது என்றாலும், அதில் ஆபத்துக்களும் அதிகம் உள்ளது என்றாலும் சமூக ஊடகங்கள், அதிக அளவில் பொய் செய்திகளைப் பரப்புவதையும் எளிதாக்கியுள்ளது.
தினமும், தரவைத் திருடும் நோக்கத்துடன் வேலை தேடுவதற்கான இணையதளங்களில் போலியான வேலை விளம்பரங்கள் மற்றும் நியமனக் கடிதங்களை வெளியிடுகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக புழக்கத்தில் உள்ள போலி நியமனக் கடிதங்கள் குறித்து வேலை தேடுபவர்கள் அனைவரும் கவனமாக இருக்குமாறு வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. ஒரு ட்வீட்டில், வருமான வரித்துறை ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டது. இந்த மோசடி கடிதங்களுக்கு இரையாக வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கிறது.
வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வருமான வரித்துறையில் பணியின் சேர்வதற்கான போலியான நியமனக் கடிதங்களை வழங்குவதன் மூலம் வேலை தேடுபவர்களை ஏமாற்றும் மோசடி நபர்களுக்கு இரையாக வேண்டாம் என்று வருமான வரித்துறை எச்சரிக்கிறது. இது தொடர்பான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் பரிசு: வட்டியில்லா முன்பணத்தை அளிக்கிறது அரசு
Income Tax Department cautions the public not to fall prey to fraudulent persons misleading job-aspirants by issuing fake appointment letters for joining the Department. A public notice in this regard has been issued, which is available at this link:https://t.co/7imrJHapGg pic.twitter.com/j5ZbPF5zMw
— Income Tax India (@IncomeTaxIndia) February 22, 2022
தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள முழு அறிக்கை வருமாறு:
வருமான வரித்துறையில் பணியில் சேருவதற்காக போலி நியமனக் கடிதம் வழங்கி சில மோசடி நபர்கள் தேர்வர்களை ஏமாற்றி வருவதாக வருமான வரித்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வருமான வரித்துறையில் உள்ள அனைத்து குரூப் பி/குரூப் சி பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு பணி, பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள்/ முடிவுகள், SSC இணையதளமான https://ssc.nic.in என்னும் வலைதளத்தில் பெறலாம் என்பதை பொது மக்களுக்கு இதன்மூலம் தெரிவிக்கிறோம்.
தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறித்த விரபம் https://comintaxindia.gov.in என்ற துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். எனவே, எஸ்எஸ்சி மற்றும் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களைத் தவிர வேறு எந்த தளம்/போர்டல் மூலமாகவும் விளம்பரப்படுத்தப்படும் அல்லது வெளியிடப்படும் இதுபோன்ற போலி விளம்பரங்கள்/அறிவிப்புகள்/ நியமனங்கள்/கடிதங்கள் ஆகியவற்றை நம்ப வேண்டாம் என பொதுமக்கள் இதன்மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள்/ அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | 7th Pay Commission நல்ல செய்தி: டிஏ அரியர் தொகை பற்றிய முக்கிய அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR