மும்பையில் காரில் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியதை கண்டு பொதுமக்கள் கயிற்றை வைத்து காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றதோடு போக்குவரத்தும் பெரும் பாதிப்படைந்துள்ளது. மும்பையில், கடந்த இரண்டு வாரங்களாக பருவமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டலோஜா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பம் வெள்ளத்தில் சிக்கியது. காருடன் வெள்ளத்தில் சிக்கிய அவர்கள் கார் வெள்ளத்தில் மூழ்க காரின் கூரை மீது ஏறி அமர்துள்ளனர். இவர்களை காப்பற்ற முயற்சியில் உள்ளூர் மக்கள் இறங்கினர்.
இதையடுத்து, இந்த குடும்பத்தை அப்பகுதி மக்கள் கயிற்றை வைத்தே காப்பாற்றியுள்ளனர். அதன் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
#WATCH Locals pull a family to rescue using a rope after the family's car was submerged in water, in Navi Mumbai's Taloja #Maharashtra (16.07.18) pic.twitter.com/bD7ubV7xnN
— ANI (@ANI) July 17, 2018