கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீயாய் பரவி வருகிறது. கொரோனா காலத்தில் அனைத்துமே மாறி விட்டன. திருமணங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? இப்படி நடந்த கொரோனா காலத்து அதிசய திருமணம் பற்றி இங்கே காணலாம்.
மத்திய பிரதேசத்தின் ரத்லாமில், ஒரு தம்பதியினர் பிபிஇ கிட் அணிந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் (Social Media) வைரல் ஆகி வருகிறது.
புரோஹிதர்கள் மந்திரம் ஓத, பிபீ கிட் அணிந்த மணமகனும் மணமகளும் அக்னியை வலம் வந்து மணம் செய்து கொண்டனர். இந்த நூதன திமண விழாவில் மூன்றே பேர் தான் கலந்துகொண்டனர். அனைவரும் பாதுகாப்பு கிட்களை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டனர். திங்களன்று நடந்த இந்த திருமணத்தின் வீடியோவை செய்தி நிறுவனம் ANI ட்வீட் செய்தது.
கொரோனா கால திருமணத்தின் வீடியோவை இங்கே காணலாம்:
#WATCH | Madhya Pradesh: A couple in Ratlam tied the knot wearing PPE kits as the groom is #COVID19 positive, yesterday. pic.twitter.com/mXlUK2baUh
— ANI (@ANI) April 26, 2021
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. தொற்றின் பரவல் தீவிரமாக இருக்கும் இந்த நிலையில், இந்த தம்பதிக்கு திருமணம் செய்து கொள்ள ஏன் இந்த அவசரம் எனவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
ALSO READ: கொரோனா டெஸ்ட் எடுக்க முடியாது, தாறுமாறாக ரகளை செய்த குடும்பம்!
இந்த திருமணத்தைப் பற்றி ஏ.என்.ஐ.யிடம் பேசிய ரத்லாமின் தாசில்தார் நவின் கார்க், "மணமகனுக்கு ஏப்ரல் 19 அன்று கொரோனா தொற்று (Coronavirus) உறுதியானது. நாங்கள் திருமணத்தை நிறுத்த இங்கு வந்தோம், ஆனால் மூத்த அதிகாரிகளின் வேண்டுகோள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில், திருமணம் நடந்து முடிந்தது. தொற்று பரவாமல் இருக்க மணமகனும் மணமகளும் பிபிஇகிட்டுகளை அணிந்து திருமணம் செய்துகொண்டனர்" என்று கூறினார்.
இந்தியாவில் தற்போது கோவிட் -19 (COVID-19) இன் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வர, மக்கள் நிகழ்வுகளில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேச அரசின் வழிகாட்டுதலின்படி, திருமணங்களில் அதிகபட்சமாக 50 விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மத்திய பிரதேசத்தின் பிண்ட் மாவட்டத்தின் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், திருமண விழாக்களில் 10 பேருக்கு குறைவான விருந்தினர்களுடன் நடத்தப்படும் திருமணங்களின் மணமகனுக்கும், மணமகளுக்கும், தனது வீட்டில் ஒரு ஆடம்பரமான இரவு உணவிற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளார்.
"பத்து அல்லது குறைவான விருந்தினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தால், அந்த மணமகன், மணமகளுக்கு என் வீட்டில் ருசியான இரவு உணவு விருந்தை அளிக்கப் போகிறேன். அத்தகைய தம்பதிகளுக்கு கோவிட் -19 வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதற்காக நினைவு பரிசும் வழங்கப்படும். மற்றும் ஒரு அரசு வாகனம் மூலம் அவர்கள் அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்" என்று பிண்ட் போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் சிங் செய்தி நிறுவனமான பி.டி.ஐ இடம் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள இந்த திருமணத்திற்கு நெட்டிசன்கள் அளித்துள்ள சில கமெண்டுகள் இதோ:
Why couldn't they wait?
— Walnut Crumble (@walnut_crumble) April 26, 2021
Should be arrested immediately for risking life of others... trying too many fancy things in this hour. Sick
— vishal (@vishaljoshi00) April 26, 2021
Was this so important?
But, again it's their choice.— S S Singh (@Singh2639) April 27, 2021
ALSO READ: பிக் பாஸ் புகழ் Raiza wilson-னுக்கு என்ன ஆனது? ஆன்லைனில் கொதித்தெழுந்தார் நடிகை!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR