இந்த ஐடியா நமக்கு தெரியாம போச்சே! தந்தை செய்த காரியம் -பார்க்க வீடியோ

Child Cracker Video: குழந்தைகளை மகிழ்விக்க பெற்றோர்கள் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் குறித்த வீடியோ பற்றி பார்ப்போம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 23, 2022, 04:19 PM IST
இந்த ஐடியா நமக்கு தெரியாம போச்சே! தந்தை செய்த காரியம் -பார்க்க வீடியோ title=

Child Cracker Video: தீபாவளி அன்று புத்தம் புது ஆடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்து வழக்கம். தீபாவளி பண்டிகையின் போது தங்கள் புகைப்படம் மற்றும் பட்டாசு வெடிக்கும் காட்சிகளை தங்கள் சமூக பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அப்படி ஒரு வீடியோ கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது. 

தீபாவளி என்றாலே பட்டாசு தான் என்ற நிலை தான் இன்னும் இருக்கிறது. அதுவும் குழந்தைகள் குறித்து சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு புது துணி வாங்கவில்லை என்றால கூட கண்டுக்கொள்ள மாட்டார்கள். சமாளித்து விடலாம். ஆனால் அதுவே பட்டாசு மட்டும் இல்லை என்றால், அவ்வளவு தான், அவர்களை சமாளிப்பது பெரும் கஷ்டமாகி விடும்.

குழந்தைகளை மகிழ்விக்க பெற்றோர்கள் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் குறித்த வீடியோ பற்றி பார்ப்போம். 

ALSO READ |  செவிலியரை கொடூரமாக தாக்கும் நபர் -வீடியோ வைரல்

அந்த வீடியோவில், தந்தையும், மகளும் பட்டாசு வெடிக்க முயற்சிக்கிறார்கள். குழந்தை பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டு உள்ளது. அதனை நிறைவேற்ற, குழந்தையை அருகில் அழைத்து, ஒரு பட்டாசை வைத்துவிட்டு, பத்த வச்சாச்சு ஓடு ஓடு என்று சொல்கிறார். உடனே குழந்தையும் தனது காதை பொத்திக்கொண்டு வேகமாக சாலையில் இருந்து வீட்டை நோக்கி ஓடுகிறது. 

இதற்கிடையில், குழந்தையின் தந்தை, அந்த பத்த வைக்காத பட்டாசை எடுத்து வைத்துக்கொண்டு, ஏற்கனவே கையில் வைத்திருந்த ருகில் இருந்த கல்லை, அந்த பாத்தரத்தின் மீது போடுகிறார். அந்த சத்தத்தைக் கேட்ட குழந்தை பட்டாசு தான் வெடித்தது என நினைத்து மகிழ்ச்சி அடைந்த அந்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

 

இந்த வீடியோவை Mannai என்பவர் சிரிச்சே கடுப்பேத்துவோம் என்ற பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "செலவே இல்லாம முடிச்சிட்டானே... இந்த ஐடியா நமக்கு தெரியாம போச்சே" என கிண்டலாக பதிவுட்டுள்ளார்.

ALSO READ |  தனது சொந்த நண்பனை தாக்கிய ராட்சத முதலை - Viral Video

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News