லட்சுமி நாராயண யோகத்தால் இந்த ராசிகளுக்கு பண மழை.. புகழ், வெற்றி கிடைக்கும்

Lakshmi Narayan Rajayogam: ஜோதிடத்தில், லக்ஷ்மி நாராயண் யோகத்திற்கு சிறப்பாக கருதப்படுகிறது. இந்த யோகம் புதன், சுக்கிரன் சேர்க்கையால் மட்டுமே உருவாகும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 9, 2024, 04:56 PM IST
  • புதன், சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம்.
  • எந்த ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்.
  • வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பதவி, மரியாதை கிடைக்கும்.
லட்சுமி நாராயண யோகத்தால் இந்த ராசிகளுக்கு பண மழை.. புகழ், வெற்றி கிடைக்கும் title=

Lakshmi Narayan Rajyogam : ஜோதிடத்தில், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கிரகங்களின் ராசி மாற்றம் நடைபெறும். இதில் இந்த கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும். இந்த பெயர்ச்சியின் போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு ராசியில் நுழையும் போது ராஜயோகம் உருவாகும். அந்த வகையில் மகிழ்ச்சி, செல்வம் போன்றவற்றை அள்ளித் தரும் சுக்கிரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடக ராசியில் பெயர்ச்சி அடைந்தார். இந்த ராசியில் ஏற்கனவே கிரகங்களின் அதிபதியான புதன் பயணித்து வருவதால், சுக்கிரன், புதன் புதனும் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இந்த சேர்க்கையால் தற்போது லக்ஷ்மி நாராயணன் யோகம் உருவாகியுள்ளது. மேலும் இந்த யோகமானது மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலன்களை அள்ளித் தரும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக பலனைத் தரும் என்பதை பார்ப்போம்.

மிதுனம் (Gemini Zodiac Sign): சுக்கிரன் புதன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் லக்ஷ்மி நாராயண் ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு வரமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணத்தை இப்போது திரும்பப் பெறலாம். தொழில் முன்னேற்றம் அடையும், இதனால் பண வரவும் உண்டாகும். உங்களின் தைரியம் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணத்தை மேற்கோள்வீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கலாம். பண ஆதாயம் உங்கள் நிதி நிலையில் ஏற்றம் தரும். வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் புதிய காதல் மலரும். 

மேலும் படிக்க | Venus Transit 2024: குரு பணத்தை கொடுத்தால் செலவு வைத்து பணப்பிரச்சனைக்கு காரணாகும் சுக்கிரன்!

கடகம் (Cancer Zodiac Sign): புதன் சுக்கிரன் (Budhan - Sukran) சேர்க்கையால் உருவாக்கி இருக்கும் லக்ஷ்மி நாராயண யோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் முடிவடையும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். லட்சுமி தேவியின் அருளால் எதிர்பாராத பண ஆதாயத்தை தரும். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்தியைப் பெறலாம். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சரியான நேரம் இது. அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் பண ஆதாயம் உண்டாகும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மகரம் (Capricorn Zodiac Sign): சுக்கிரன் புதன் சேர்க்கை மற்றும் லக்ஷ்மி நாராயணர் (Lakshmi Narayan Rajyogam) யோகத்தால் சுப பலன் கிடைக்கும். நீண்ட காலமாக நிலவையில் இருந்த வேலைகள் அனைத்தும் இப்போது முடிவுக்கு வரலாம். திருமணம் நடைபெறலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். இதனால் ஆதாயம் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பலன்களைப் பெறலாம். நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த பணம் திரும்ப கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பதவி, மரியாதை கிடைக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sun Tranist July 17 In Cancer Zodiac : ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News