எமதர்மனிடம் கோரிக்கை வைக்க இதுவே சரியான நேரம்..! ஆயுள் நீட்டிக்கும் 10 ரூபாய் பரிகாரம்

Yama worship | எம தர்மராஜாவை சாந்தப்படுத்தவும், அவரிடம் ஆயுளை நீட்டிக்கவும் கோரிக்கை வைக்க இதுவே சரியான தருணம். வெறும் 10 ரூபாய் செலவில் எமதர்ம ராஜாவை சாந்தப்படுத்தலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 30, 2024, 06:43 PM IST
  • தீபாவளி எமதர்ம வழிபாடு
  • 10 ரூபாய் பரிகாரம் செய்யுங்கள்
  • குடும்பத்தினரின் ஆயுள் நீடிக்கும்
எமதர்மனிடம் கோரிக்கை வைக்க இதுவே சரியான நேரம்..! ஆயுள் நீட்டிக்கும் 10 ரூபாய் பரிகாரம் title=

Yama worship Tamilnadu | ஆயுளை எடுக்கும் வேலை செய்யும் எமதர்மராஜா கடவுளை தீபாவளி நேரத்தில் சாந்தப்படுத்தக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஐப்பசி மாதம் தேய்பிறை திரயோதசி திதியில் எம தர்ம ராஜாவுக்கு மா விளக்கு ஏற்றி வழிபட்டால் ஆயுளை நீட்டிப்பதுடன், உங்களின் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வார். இதேபோல், பிரதோஷம் வரும் தேதியிலும் எம தர்ம ராஜாவுக்கு தீபம் ஏற்றி வழிபடலாம். குறிப்பாக, மாலை நேரத்தில் நான்கு முகம் கொண்ட தீபத்தை ஏற்றி வழிபடும்போது எமதர்ம ராஜாவின் அருட்பார்வை கிட்டும். குடும்பத்தில் யாருக்கும் அகால மரணம் ஏற்படாது. இந்த தீபம் ஏற்றுவதற்கு வெறும் 10 ரூபாய் தான் செலவாகும். 10 ரூபாய் பரிகாரம் மூலம் எமதர்மனை சாந்தப்படுத்திவிடலாம். 

சரி, எமதர்மனை எங்கு சென்று தரிசிக்கலாம்?, அவருக்கு எங்காவது கோவில் இருக்கிறதா? என கேட்டால், ஆம் அவருக்கு கோவில் இருக்கிறது. அந்த கோவில்களுக்கு சென்று எமதர்ம ராஜாவை வழிபடலாம். தமிழ்நாட்டில் எமதர்ம ராஜாவுக்கு எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம். 

மேலும் படிக்க | குபேரரின் அருளையும்... கோடீஸ்வர யோகத்தையும்... பெறும் சில அதிர்ஷ்ட ராசிகள்

எமதர்ம ராஜாவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்கள் :

1. எமதர்ம ராஜாவுக்கு பிரத்யேகமாக இருக்கும் கோவில் என்றால் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே இருக்கும் திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது. சுமார் 1000 வருடங்கள் பழமையான இந்த கோவில் மூலவரே எமதர்ம ராஜா தான். இக்கோவிலில் முறுக்கிய மீசையுடன் எருமை மீது அமர்ந்து நீல வண்ணத்தில் வஸ்திரம், பாசக்கயிறு அணிந்து காட்சியளிப்பார். இக்கோவிலில் எமதர்ம ராஜாவை நேரில் வழிபடுபவர்களுக்கு ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை வரும் எமகண்ட நேரங்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். 

2. திருச்சியில் எமதர்ம ராஜாவுக்கு கோவில் இருக்கிறது. திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோவிலில் எமதர்மன் சன்னிதி அமைந்துள்ளது. பத்தடி ஆழத்தில் உள்ள இந்தக் கோவிலில், சிவபெருமானின் காலடியில் குழந்தை வடிவில், எமதர்மன் உள்ளார் என்பது சிறப்பு. 

3. மயிலாடுதுறையில் நன்னிலம் - குடவாசல் சாலையில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சி நாதர் கோவிலில் எமதர்மராஜனுக்கு தனி சன்னிதி உள்ளது. இத்தலத்தில் இறப்பவர்களுக்கு மரண வேதனை இல்லை என்பது ஐதீகம். இத்தலத்து வாஞ்சிநாதருக்கு எமதர்மராஜன் வாகனமாக உள்ளார். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி, எமனை வழிபட்ட பிறகே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது மரபு. இப்பகுதியில் இறப்பு மற்றும் கிரகணம் போன்ற காரணங்களுக்காக கோவில் மூடப்படுவதில்லை.

4. கோவை மாவட்டத்தில் சித்ரகுப்தனுக்கும்,  எமதர்மராஜன் கோவிலும் உள்ளது. இந்தக் கோவில் சிங்காநல்லூர்- வெள்ளலூர் பாதையில் அமைந்துள்ளது. கருவறையில் எமதர்மன் எருமையின் மீது அமர்ந்தபடியும், அவருக்கு அருகில் சித்ரகுப்தன் நின்றபடியும் சிலை வடிவம் இருக்கிறது.

5. கோயம்புத்தூரில் இருந்து காரமடை வழியாக சத்தியமங்கலம் செல்லும் பாதையில் உள்ள சிறுமுகையில் எமனுக்கு கோவில் இருக்கிறது. சக்தி வாய்ந்த கோவிலாக கருத்தப்படுகிறது. இந்த கோவிலில் பவுர்ணமி நாளன்று தரிசனம் செய்தால், ஆயுள் தோஷம் விலகுவதாக ஐதீகம். எந்த நோயாக இருந்தாலும் வேண்டிய ஒரு மாத காலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

6. புதுச்சேரியில் உள்ள பிரத்யங்கிரா கோவிலில் எமதர்மனுக்கு வடதிசை நோக்கிய சன்னிதி அமைந்துள்ளது. எருமை வாகனத்தில் அமர்ந்துள்ள எமனின் கைகளில் சூலாயுதம் மற்றும் கதை உள்ளன. இந்த தலத்தில் எமதர்மன் யோக நிலையில் இருப்பதாக ஐதீகம்.

மேலும் படிக்க | மாசத்துக்கு நாலு முறை வீட்டை மாத்தினா என்ன செய்ய? நவம்பர் மாத புதன் பெயர்ச்சியால் அலுத்துக் கொள்ளும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News