Budh Asta In Mesham 2023: வேத சாஸ்திரங்களில், புதன் கிரகம் புத்திசாலித்தனம் மற்றும் தர்க்கத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. புதன் மேஷ ராசியின் மூன்றாவது மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி ஆவார். புதன் கிரகம், வரும் 23 ஏப்ரல் அன்று முதல் மேஷத்தின் முதல் வீட்டில் அஸ்மதிக்கப்போகிறது.
புதனின் அஸ்தனம் காரணமாக, பூர்வீகவாசிகள் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அப்போது, வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த ரீதியில் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மேலும், தூக்கமின்மை, பசியின்மை போன்ற உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். புதன் அஸ்தமனத்தால் நான்கு ராசிகளின் அதிஷ்டமும் சுமார் ஒரு மாத காலத்திற்கு வீழ்ச்சியை சந்திக்கும்.
மேஷத்தில் புதன் அஸ்மிப்பதால் ஏற்படும் விளைவுகள்
மேஷம்
மேஷத்தில் புதன் அஸ்தமிக்கும் போது, நீங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உயர் ரத்த அழுத்தம், தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உணவில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம்.
மேலும் படிக்க | ராகுவால் ராஜயோகம், சுக்கிரனால் காதல் யோகம்! இரண்டும் இணைந்தால்? யோகமோ யோகம்
கடகம்
இந்த ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமிப்பது நல்லதல்ல. பல பொன்னான வாய்ப்புகள் அவர்கள் கையை விட்டு நழுவலாம். இந்த ராசிக்காரர்கள் சிலர் வேலையை இழக்க நேரிடும். உங்கள் இலக்குகளை நீங்கள் சந்திக்க முடியாமல் போகலாம் அல்லது உங்கள் மூத்தவர்கள் உங்கள் மீது கோபப்படக்கூடும், இதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சில பாதிப்புகளுக்கு ஆளாகலாம். அமைதியான மனதுடன் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
கன்னி
புதன் அஸ்தமிப்பதால், உங்களால் பணியிடத்தில் சிறப்பாக செயல்பட முடியாது. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இதன் காரணமாக நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். பணியிடத்தில் பணி அழுத்தம் அதிகரிக்கலாம், இதன் காரணமாக வேலையில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். சொந்தக்காரர்களுக்கு செலவுகள் கூடும். இந்த காலகட்டத்தில் சம்பாதித்த பணத்தில் இருந்து சேமிப்பது உங்களுக்கு எளிதாக இருக்காது.
தனுசு
புதன் கிரகத்தின் அஸ்தமனத்தால், உங்களின் வரவிருக்கும் நேரம் சவாலானதாக இருக்கும். வியாபாரத்தில் கடும் போட்டி ஏற்படலாம். தொழில் பங்குதாரரின் முழு ஆதரவு கிடைக்காததால் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். உங்கள் வருமானத்துடன் ஒப்பிடுகையில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும், அதைச் சந்திப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஏமாற்றத்தை உணரலாம். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலையாக இருக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் அனுமாங்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ஏப்ரல் முதல் வாரத்தில் 4 ராசிகளுக்கு ஜாக்பாட், பண மழை கொட்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ