பகவான் விஷ்ணுவிற்கு மிகவும் உகந்த விரதங்களில் முக்கியமானது ஏகாதசி விரதம். ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை வழிபட்டு, விரதம் இருந்தால், அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெறலாம், மண்ணில் வாழும் வரை நல்லபடியாக நம்பிக்கை. இந்த சோபகிருந்து ஆண்டின் கடைசி மாதமான பங்குனி மாத ஏகாதசியன்று புதன்கிழமை அன்று வருவது கூடுதல் சிறப்பு. புதன் கிழமை வருவதால், விஷ்ணு லட்சுமி தேவி மற்றும் அன்னப்பூரணித் தாயாரை வணங்க வேண்டும்.
ஏகாதசி விரதமானது பாவங்களை அழிப்பதுடன், வளமான வாழ்வையும் தந்து மங்காத பேரும், புகழையும் கொடுக்கும். காசியில் சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பது தரும் பன்களைவிட அதிக பலன்களைத் தரக்கூடியது ஏகாதசி விரதம் என்று சொல்லப்படுவது உண்டு. இதன் மூலம் ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.
பங்குனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘அமலகி ஏகாதசி’ எனப்படும். நெல்லி மரத்தின் அருகில் இந்த ஏகாதசி விரத பூஜை செய்யப்படுவதால் ‘அமலகி ஏகாதசி’ எனப் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், அனைத்துப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும் கோதானம் செய்த பலனும் கிடைக்கும். இந்த ஆண்டு அமலகி ஏகாதசி நாளை அதாவது, சோபகிருது ஆண்டு மார்ச் ஏழாம் நாள் புதன்கிழமையன்று வருகிறது.
மேலும் படிக்க | 64 கலைகளும் கூடி சந்திரன் காட்சியளிக்கும் முழுநிலவு நாள் பங்குனி உத்திரமும் திருக்கல்யாணங்களும்.
அமலகி ஏகாதசி வரலாறு
அமலகி ஏகாதசி நாளன்று மன்னர் சித்ரரதர் மற்றும் அவரது குடிமக்கள் அனைவரும் இருந்தனர். விதிமுறைகளின் படி விரதத்தை கவனமாகக் கடைப்பிடித்தனர். அரசர் நதியில் நீராடிவிட்டு விஷ்ணுவின் கோவிலுக்குச் சென்றனர், அங்கு ஒரு நெல்லி மரம் இருந்தது.
அரசரும் முனிவர்களும், முக்கிய பிரமுகர்களும் நெல்லி மரத்திற்கு பூஜை செய்து தானங்கள் கொடுத்தனர். அதன்பிறகு, இரவு முழுவதும் கண் விழித்து விரத விதிகளை கடைபிடித்து அடுத்த நாள் துவாதசியன்று முறைப்படி விரதத்தை முடித்தனர்.
அப்போது, இந்த ஏகாதசி நோன்பு மற்றும் பிரார்த்தனைகள் தொடர்பான எந்த தகவலும் தெரியாத வேடன் ஒருவர்,மன்னர் சித்ரதர் மற்றும் அவரது குடிமக்களுடன் அன்று இரவு தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவனும் மற்றவர்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் விழித்திருந்தார்.
அவருக்கு உண்மை தெரியாமலேயே விரதம் இருந்தாலும், விரதத்தை கடைபிடித்ததால், இறைவனின் அருள் பூரணமாக கிடைத்தது. இதன் விளைவாக, இறந்த பிறகு அவர் மீண்டும் மன்னராக பிறந்தார்.
மேலும் படிக்க | குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்
முந்தைய ஜென்மத்தில். அமலகி ஏகாதசி விரதத்தை தெரியாமலேயே கடைபிடித்ததன் பயனாக, விஷ்ணுவின் அருளை, இம்மையிலும் மறுமையிலும் பெற்றார் என்பது நம்பிக்கை.
ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால், மனம் தூய்மை அடைந்து, மனதில் வெறுப்பு, கோபம், குழப்பம் ஆகியவை விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். அதோடு, நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி, வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம். அதிலும் மனதை ஒருநிலைப்படுத்தி நாள் முழுவதும் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது.
ஏகாதசி விரதம் இருக்கும்போது, தூங்காமல் கண் விழித்து இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும்.வழிபாடு செய்வது அவசியம். அடுத்த நாள் துவாதசியன்று உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மாத்ரு காரகரும் மனோகாரகரும் இணைந்தால்? 100 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கேது-சந்திரன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ