சனி சுக்கிரனால் நவபஞ்சம யோகம்: இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம், முழு ராசிபலன் இதோ

shani shukra navpancham yoga horoscope: ஜோதிடத்தில், கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு யோகாவிற்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. சிலருக்கு சுப பலன்களும் சிலருக்கு அசுப பலனும் தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 8, 2023, 11:22 AM IST
  • கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
  • அதிக ஆர்வத்துடன் இருப்பதை தவிர்க்கவும்.
  • நவபஞ்சம யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எப்படி இருக்கும்.
சனி சுக்கிரனால் நவபஞ்சம யோகம்: இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம், முழு ராசிபலன் இதோ title=

navpancham yoga horoscope: ஜோதிடத்தில், கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதன்படி தற்போது சனியும் சுக்கிரனும் சேர்ந்து நவபஞ்சம யோகத்தை உருவாகியுள்ளது. சில ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகத்தால் சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். பொதுவாக ஜோதிடத்தில் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நற்பலனைத் தராது. குறிப்பாக இரண்டு கிரகங்களின் சேர்க்கை சுபத்துவமில்லாத வீட்டில் இருக்கும் பட்சத்தில் அப்படிப்பட்ட அமைப்பை திருமணமான தம்பதிகளில் ஒருவர் பெற்றிருந்தால் கூட அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் சிக்கலானதாகவும், எப்போதும் சண்டை, சச்சரவுடன் இருப்பார்கள். எனவே நவபஞ்சம யோகத்தின்  தாக்கம் அனைத்து ராசிகளிலும் எப்படி இருக்கும் என இந்த பதிவில் காணலாம். 

நவபஞ்சம யோகம் என்றால் என்ன?

நவபஞ்சம யோகம் என்பது இரு கிரகங்கள் பரஸ்பரம் ஒரு முக்கோண பாவத்தில் அமைந்தால் உருவாகிறது. ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகள் பல சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. 

மேலும் படிக்க | ஞாயிற்றுக்கிழமை பரிகாரங்கள்..! சூரிய பகவானின் அருளால் செல்வம் கிடைக்கும்..!

நவபஞ்சம ராஜயோகம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பலனை தரும்?

மேஷ ராசி: நம்பிக்கை அதிகரிக்கும், ஆனால் மனம் கலங்காமல் இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத்துடன் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம்.

ரிஷப ராசி: மனதில் குழப்பம் இருக்கும். மனதில் எதிர்மறையான எண்ண ஏற்படலாம். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். கல்விப் பணிகளுக்கு மகிழ்ச்சியான பலன் கிடைக்கும்.

மிதுன ராசி: மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். அதிக ஆர்வத்துடன் இருப்பதை தவிர்க்கவும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். மரியாதை கிடைக்கும்.

கடக ராசி: மனதில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். கோபத்தைத் தவிர்க்கவும். வியாபார நிமித்தமாக ஏற்பட்டிருந்த கடன்கள் அனைத்தும் தீரும். 

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு மனதில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்படும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். எச்சரிக்கையாக இருங்கள்.

கன்னி ராசி: மனதில் ஏற்ற தாழ்வுகள் காணப்படும். பொறுமையாக இருங்கள். தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மன பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

துலாம் ராசி: மனம் அமைதியின்றி இருக்கும். பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களிடமிருந்து நிதி உதவி கிடைக்கும்.

விருச்சிக ராசி: பேச்சில் இனிமை இருக்கும். முழு நம்பிக்கையுடன் இருப்பீரகள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் வெற்றி கிடைக்கும்.

தனுசு ராசி: நம்பிக்கை அதிகமாக இருக்கும். சமய இசையில் நாட்டம் கூடும். எதிரிகள் மீது வெற்றி உண்டாகும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம்.

மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு மனதில் நம்பிக்கை மற்றும் விரக்தி உணர்வுகள் ஏற்படலாம். வாரத்தின் தொடக்கத்தில் குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும். தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்ப ராசி: மன அமைதி இருக்கும், ஆனால் தன்னம்பிக்கை குறையும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாகன சுகம் குறையும்.

மீன ராசி: மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தடைப்பட்ட அனைத்து பணத்தையும் பெறலாம். வாகன சுகம் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு உதயம்: இந்த யோகத்தால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News