Ganga Dussehra Rasipalan : கங்கை மண்ணுலகுக்கு வந்த நாளை 'கங்கா தசரா' என கொண்டாடப்படுகிறது. சிவனின் அம்சமாய், சிவனின் தலைமுடியில் இருந்து பூமிக்கு இறங்கி, இந்தியாவை வளப்படுத்தும் கங்கை நதி, மண்ணுக்கு வந்த நாள் கங்கா சப்தமி என்று பெயர்பெற்றது. இந்த நாள் இந்து மதத்தில் மிகவும் முக்கியமான நாள். விஷ்ணு பகவான் வாமன அவதாரம் எடுத்தபோது ஆகாய கங்கையாக தோன்றிய கங்கா நதி, பாகீரதின் தவத்தின் பயனாய் பூலோக கங்கையாய் பூமிக்கு இறங்கி வந்தது. இந்தியாவின் தேசிய நதியான கங்கை நதியின் பூவுலக பிறந்தநாளான கங்கா சப்தமி ஆண்டுதோறும் விமரிசையாய் கொண்டாடப்படுகிறது.
அதிலும் இந்த ஆண்டு கங்கா தசரா பல காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு, கங்கா தசரா நாளன்று பல அற்புதமான தற்செயல் யோகங்கள் ஏற்படுகின்றன. புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே ராசியில் அதாவது மிதுன ராசியில் இணைந்திருப்பது ஒரு முக்கிய நிகழ்வு என்றால், சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகம், ரவி யோகம் உருவாகின்றன. இதற்கு முதல் நாளான ஜூன் 15 அன்று, திரிகிரஹி யோகம், புதாதித்ய யோகம் சுக்ராதித்ய யோகம் மற்றும் லக்ஷ்மி நாராயண யோகமும் உருவாகின்றன. இந்த ஏழு யோகங்களும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
கங்கா தசரா நாளன்று, கங்கையில் நீராடிவிட்டு தானம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். மனம் உருகி வேண்டுபவர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் கங்கை அன்னை, பித்ரு தோஷ நிவாரணத்தைத் தருகிறார். அத்துடன், கங்கா தசரா அன்று கங்கையில் நீராடி சூரியனுக்கு அர்க்கியம் விடுபவர்களின் பாவங்களைக் குறைத்து, கெடுபலன்களை குறைத்து அருள் புரிகிறார் சிவபெருமான்.
சிவனின் அம்சமான கங்கை அன்னையை கங்கா தசரா நாளான ஜூன் 17 திங்கட்கிழமை அன்று வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. அதற்கு காரணம்
சிவ பெருமானுக்கு உகந்த திங்கட்கிழமை
கங்கா தசரா
சூரியனுக்கு உகந்த நாள்
கங்கா தசரா - தசமி திதி
கங்கா தசரா கொண்டாடப்படும் தசமி திதி, ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி அடுத்த நாள் ஜூன் 17, திங்கட்கிழமை மாலை 4:43 மணிக்கு முடிவடையும். அதனை அடுத்து நிர்ஜலா ஏகாதசி தேதி தொடங்கும்.
கங்கா தசரா அன்று உருவாகும் சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகம், ரவி யோகம் மற்றும் அதற்குக் முன்னரே மிதுன ராசியில் ஏற்பட்டிருக்கும் திரிகிரஹி யோகம், புதாதித்ய யோகம் சுக்ராதித்ய யோகம் மற்றும் லக்ஷ்மி நாராயண யோகமும் அனைவருக்குமே நற்பலன்களைக் கொடுக்கும். இந்த யோகங்களால் பலனடையும் ராசிகளில் உங்கள் ராசியும் உள்ளதா என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேஷம் - கங்கா தசரா
மேஷ ராசிக்காரர்களுக்கு கங்கா தசரா மிகுந்த மகிழ்ச்சியைத் தரப் போகிறது. ஏற்கனவே உள்ள 7 யோகங்களுடன் இந்த ராசியில் மாளவ்ய ராஜயோகம் உருவாகும். இது மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும் பெருகச் செய்யும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், பொருளாதார நிலை வலுப்பெறும், வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புகளும் உண்டு என்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான காலம் என்று சொல்லலாம்.
மிதுனம் - கங்கா தசரா
கங்கா தசரா அன்று, கிரகங்களின் மாற்றம் மற்றும் 3 அற்புதமான யோகங்களின் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். வெற்றி வாய்ப்பைக் கொடுக்கும் இந்த சேர்க்கைகள் வேலை செய்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும், வாழ்க்கையில் திருப்தியும் நிம்மதியும் கிடைக்கும் காலம் இது.
கும்பம் - கங்கா தசரா
கங்கா தசரா அன்று நடக்கும் யோகங்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு பலன் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும் பண லாபமும் கிடைக்கும். ஆன்மீகக் காரியங்களில் ஆர்வமுடன் ஈடுபடலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம். வியாபாரத்திலும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை).
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ