இன்னும் 5 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம், ராஜயோகம் ஆரம்பம்

Mars Transit In March : மார்ச் 15ம் தேதி மாலையில் செவ்வாய் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இதில் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு பண வரவு, நிதி நிலை மேம்படும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 10, 2024, 05:28 PM IST
  • அரசுப் பணிகள் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கும்.
  • வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • கல்வியில் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இன்னும் 5 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம், ராஜயோகம் ஆரம்பம் title=

Mars Transit In March : செவ்வாய் பகவான் பூமி காரகன், வலிமையான கிரகம், செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கு வீடு மற்றும் வாகன யோகம் அமையும். அந்த வகையில் இவர் தன்னம்பிக்கை, வீரம், தைரியம், வலிமை, விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ஆசைக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இந்நிலையில் இந்த மார்ச் மாதம் கிரகங்களின் சேனாதிபதியான செவ்வாய் பெயர்ச்சியாகப் போகிறது. இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் மார்ச் 15,ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 06:22 மணிக்கு, சனியின் திரிகோண ராசியான கும்பத்தை கடக்கிறார். இது மாபெரும் ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. செவ்வாய் மார்ச் 15 முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை காலை 08:52 மணிக்கு கும்ப ராசியில் இருக்கிறார். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிகாரம், பதவி அதிகரிக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.

மேஷம் (Aries Zodiac Sign): கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சி அடையப் போவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம். மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு புதிய சலுகைகள் அல்லது புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வணிகம் மேலோங்கும். தொழிலை விரிவாக்கலாம். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். தேர்வில் வெற்றி பெறலாம்.

ரிஷபம் (Taurus Zodiac Sign): கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சி அடையப் போவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு பெறலாம். உத்தியோகத்தில் வருமானம் கூடும். வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு நல்ல செய்தி வந்து சேரும். கல்வியில் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மேலும் படிக்க | மீனத்தில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பதவி... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

சிம்மம் (Leo Zodiac Sign): கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சி அடையப் போவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிலுவையில் இருந்த அரசு பணிகள் நிறைவேறும். வணிகர்கள் சில புதிய முயற்சிகளை தொடங்கலாம். அரசுப் பணிகள் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி (Virgo Zodiac Sign): கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சி அடையப் போவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கலாம். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். 

கும்பம் (Aquarius Zodiac Sign): கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சி அடையப் போவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு பல சாதகமான பலன் கிடைக்கும். மேலும் அலுவலகத்தில் அந்தஸ்து, பதவி உயர்வு, சம்பள உயர்வு கூடும். அனைத்து துறையிலும் வெற்றி பெறலாம். அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க நல்ல நேரம். அரசு வேலைகள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | அள்ளிக் கொடுப்பார் ராகு - கேது! இவர்களுக்கு குரோதி வருடம் அட்டகாசமாய் இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News