மார்கழி மாதம் வந்தாச்சு! கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!

மார்கழி மாதம் வந்தாலே பல நல்ல காரியங்கள் நடக்கும். இந்த மாதத்தில் கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 16, 2023, 06:07 PM IST
  • மார்கழி மாதம் வந்துவிட்டது.
  • இந்த மாதத்தில் சில விஷயங்களை செய்ய வேண்டும்.
  • அவை என்னென்ன தெரியுமா?
மார்கழி மாதம் வந்தாச்சு! கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்! title=

மார்கழி மாதத்தை பொறுத்தவரை, ஆன்மிக வகையிலும், அறிவியில் வகையிலும் பல நன்மைகள் நடைபெறுவது வழக்கம். இம்மாதத்தில் கண்டிப்பாக செய்ய வேண்டிய, கண்டிப்பாக செய்யக்கூடாத விஷயங்கள் என பல உள்ளன. இதை தவிர, மார்கழி மாதத்தில் பெண்கள் செய்ய வேண்டிய செயல்கள் என சில உள்ளன. இதனால் அவர்கள் வாழ்வில் பல நன்மைகள் நடைபெறுமாம். 

மார்கழி பூஜையின் போது என்ன செய்ய வேண்டும்?

மார்கழி மாதத்தில் சூரிய பகவான், குருவின் வீடான தனுசு ராசிக்குள் பிரவேசிப்பாராம். இதனால், மார்கழி மாதம் குருவின் ஆதிக்கம் நிறைந்த மாதமாக இருக்குமாம். இந்த மாதத்தில், பலர் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவது வழக்கம். பல கோயில்கள், குறிப்பாக பெருமாள் கோயில்கள் காலையிலேயே திறக்கப்பட்டுவிடும். இதை, பெருமாளை துயில் எழுப்புவது என கூறுவர். இந்த மாதத்தில் பெருமாளை வணங்கினால், கை மேல் பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

மார்கழி மாதம் ஏன் ஸ்பெஷல்?

மார்கழி மாதத்தில் மகாபராத போரான, குருஷேத்திர போர் நடைப்பெற்றதாக புராணங்களில் எழுதப்பட்டுள்ளது. இப்போரின் இறுதியில் உண்மையும் நியதியும் வென்றது. இப்போரில் பாண்டவர்கள் வெற்றிபெற பகவான் கிருஷ்ணன், பெரும் துணையாக இருந்தார். இதனால், மார்கழி மாதத்தில் கிருஷ்ண பெருமாளை வணங்கினால், வாழ்வில் தினசரி நாம் எதிர்கொள்ளும் போரையும் எஹ்டிர்கொள்ள முடியும் என நம்பப்படுகிறது. அது மட்டுமன்றி, இம்மாதத்தில் சில விஷயங்களை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்றும் உள்ளது. அவை என்னென்ன தெரியுமா?

மேலும் படிக்க | இன்று 3 பரிகாரங்களைச் செய்தால் போதும்! லட்சுமி தேவி ஆசி கிடைக்கும்!

கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்:

>அதிகாலையில் எழுந்து (பிரம்ம முகூர்த்தத்தில்) எழுந்து, வாசலில் கோலம் போட வேண்டும். 

>அதிகாலை பூஜை, இன்னும் நன்மை சேர்க்கும். 

>மார்கழி மாதத்தில் அனைத்து நாட்களும் கோயிலுக்கு போவதை வழக்கமாக கொள்ள வேண்டும். 

>காலையில், பின் வாசலை திறப்பதற்கு முன்பு முன் வாசலை முதலில் திறக்க வேண்டும். கதவை திறக்கும் முன்பு கஜலக்‌ஷ்மி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

>சாணம், மஞ்சள் நீரை வாசலில் தெளித்ஹ்டு கோலமிட வேண்டும். கோலம் போட்ட பின்பு, கோலத்திற்கு நடுவில் செம்பருத்தி பூவை வைக்கலாம். 

>பூஜைக்கு முன்னர் காலையில், வாசலில் 2 தீபங்கள் ஏற்ற வேண்டும். அந்த விளக்கு, நெய் விளக்காக இருந்தாலும் சரி, நெய் விளக்காக இருந்தாலும் சரி. அந்த தீபத்தை ஏற்ற வேண்டும். 

>காலையில் மட்டுமன்றி, மாலையிலும் வாசலில் 2 தீபங்கள் ஏற்ற வேண்டும். 

>திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள், மார்கழி மாதத்தில் விநாயகருக்கு அபிஷேகம் செய்தால், விரைவில் திருமணம் கைகூடும். 

>காலையில், திருப்பாவை, திருவெண்பாவை, கந்த சஷ்டி கவசம் ஆகியவற்றை பாட வேண்டும், அல்லது கேட்க வேண்டும். 

>மார்கழி மாதத்தில் கோவிலில் சாமி பெயருக்கு பூஜை செய்வது நல்லது. 

>வீட்டில் காலை,மாலை இரு வேலைகளிலும் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். 

மேலும் படிக்க | செவ்வாய்க்கிழமையில் கடன் வாங்கவே கூடாது! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News