எண் ஜோதிடம்... 1 முதல் 9 வரை... ஆடி மாத எண்ணியல் பலன்கள் கூறுவது என்ன..!!

நம் வாழ்க்கையில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் அல்லது எண் ஜோதிடம் என்று பெயர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 13, 2024, 02:51 PM IST
  • ஒருவரின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகை மூலம், அவர்களது விதிக்கான எண் பெறப்படுகிறது.
  • ஆடி மாதத்திற்கான எண் ஜோதிட பலன்கள்.
  • ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
எண் ஜோதிடம்... 1 முதல் 9 வரை... ஆடி மாத எண்ணியல் பலன்கள் கூறுவது என்ன..!! title=

நம் வாழ்க்கையில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் அல்லது எண் ஜோதிடம் என்று பெயர். ராசிகளின் அடிப்படையில் கணிப்பதை போலவே, ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து   கொள்ள முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகை மூலம், அவர்களது விதிக்கான எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆடி மாதத்திற்கான எண் ஜோதிட பலன்கள்

எண் 1: ஆடி மாத பலன்கள்

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு, ஆடி மாதம் அலைச்சல்களை கொடுக்கும் மாதமாக இருக்கும். ஆடி மாசம் வீசும் காற்றில் அம்மி மட்டுமல்ல, ஒன்றாம் எண் கொண்டவர்களும், அலைகழிக்கப்படுவார்கள். எதிர் மாறாத விதமாக வரும் செலவுகள், நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். உங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்த, முயற்சிகள் நடக்கும். உடல் நலத்திலும் (Health) கவனம் தேவை. கடன் வாங்குவதை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது.

எண் 2: ஆடி மாத பலன்கள்

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு, ஆடி மாதத்தில், இடம் மாறும் வாய்ப்பு உண்டாகலாம். இதனால் தொழிலில் வேலையில் மேன்மை உண்டாகும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு, பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. வேலையில் பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். நிதிநிலை மேம்படும்.

எண் 3: ஆடி மாத பலன்கள்

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு, ஆடி மாதத்தில் கடன் தொல்லைகள் அதிகரிக்கும். பழைய கடனை வாங்க புது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அனுப்பும் சஞ்சலமும் இருக்கும். மாணவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். படிப்பில் கவனம் செலுத்தி மனம் அலைபாயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க | இஷ்டப்பட்டு கஷ்டப்பட வைக்கும் ராகு! கஷ்டத்தை கொடுத்து வாழ்க்கையை உணர்த்தும் நிழல் கிரகம்!

எண் 4: ஆடி மாத பலன்கள்

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் பண வரவை கொடுக்கும் மாதமாக இருக்கும். பணவரவுடன் கௌரவம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு, திருமணம் கைகூடிவரும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உடல் நலத்தில் சிறிது பாதிப்பு இருக்கும் என்றாலும், பெரிய அளவில் செலவு அல்லது மன உளைச்சல் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.

எண் 5: ஆடி மாத பலன்கள்

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் லாபத்தை கொடுக்கும் மாதமாக இருக்கும். எண்ணிய எண்ணம் ஈடேறும். குடும்பத்தில் சுப நிலவுகள் நிகழ்வுகள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆன்மீக யாத்திரை செல்லும் வாய்ப்பு உண்டு. மனை வாங்கும் யோகம் உண்டாகும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

எண் 6: ஆடி மாத பலன்கள்

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு, ஆடி மாதம் செல்வ வளம் நிறைந்த மாதமாக இருக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். கைக்கு வராது என்று நினைத்த பணமும் கைக்கு வரும். வீடு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. உறவினர்களிடமிருந்து உதவியும் ஆதரவும் கிடைக்கும். எதிரிகள் உங்களை வீழ்த்தும் முயற்சியில் தோல்வியை தழுவுவார்கள். நீங்கள் எதிர்பாராத விஷயங்கள் எதிர்பாராத விதத்தில் நடக்கும்.

எண் 7: ஆடி மாத பலன்கள்

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம், மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் மாதமாக இருக்கும். பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்படாது. எனினும் முதலீட்டு விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதியாக இருக்கவும். எதிர்பாராமல் வீட்டிற்கு வரும் உறவினர்களால், வீட்டில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். வெளிநாட்டில் இருந்து வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.

எண் 8: ஆடி மாத பலன்கள்

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆடி மாதத்தில், சில தடைகளை எதிர்கொள்ள நேரிடும். வாகனங்கள் வாய்க்கும் வாய்ப்பு உண்டு. செலவுகள் அதிகரிக்கலாம். எனவே திட்டமிட்டு கவனமாக செலவு செய்ததால் நீதி பற்றாக்குறையை தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்படும்

எண் 9: ஆடி மாத பலன்கள்

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆடி மாதத்தில், சிறிது கவனமாக இருத்தல் நல்லது. ஏனெனில் பணவரவு அதிகரித்தாலும், அதை மீறி செலவுகளும் கை மீறி போகும் வாய்ப்பு உண்டு. திருமண பேச்சில் சில தடைகள் ஏற்படலாம். எனினும், தடைகள் நீங்கி வாழ்வு செழிக்கும். சவால்களை சமாளிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | ராணுவ வீரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருப்பார்? வீரத்தை தரும் அங்காரகர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News