சிம்ம ராசியில் நுழையும் சூரியன்; 2022 இறுதி வரை வெற்றிகளை குவிக்கப் போகும் ‘சில’ ராசிகள்!

Sun Transit 2022: கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் 2022 ஆம் ஆண்டு இறுதி வரை இந்த ராசிக்காரர்களுக்கு பரிபூரண அருளை வழங்குவார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 13, 2022, 03:08 PM IST
  • ன்னை மகாலட்சுமியின் அருளால் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
  • புதிய நட்பு ஏற்படலாம்.
  • வேலையில் வருமானம் இருக்கும், வேலையில் மாற்றம் ஏற்படும்.
 சிம்ம ராசியில் நுழையும் சூரியன்; 2022 இறுதி வரை வெற்றிகளை குவிக்கப் போகும் ‘சில’ ராசிகள்! title=

ஜோதிடத்தின் பார்வையில், பொதுவாக கிரகங்களின் இட மாற்றங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும், ஆகஸ்ட் மாதம் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. ஆன்மா, தந்தை, மரியாதை, வெற்றி, முன்னேற்றம் மற்றும் அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் உயர் சேவை ஆகியவற்றின் காரக கிரகமாக சூரியன் கருதப்படுகிறது. சூரிய கடவுள் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். 11 மாதங்களுக்குப் பிறகு சூரிய பகவான் ஆகஸ்ட் 17 அன்று சிம்ம ராசியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார்.  2022 ஆம் ஆண்டின் இறுதி வரை, சூரிய பகவான் சில ராசிக்காரர்களுக்கு பூரண அருளை கொடுக்க உள்ளார். டிசம்பர் 31, 2022 வரை எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்...

சிம்ம ராசி:

வேலையில் உற்சாகம் இருக்கும், ஆனால் பேச்சு வார்த்தை, ஒப்பந்தகள் போன்றவற்றில், சமநிலையுடன் இருங்கள். கவனத்துடன் செயல்பட்டால், வருமானம், வெற்றி ஆகியவை வந்து சேரும். ஆன்மீக காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் தாயின் ஆதரவு கிடைக்கும். அன்னை மகாலட்சுமியின் அருளால் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய நட்பு ஏற்படலாம். அறிவார்ந்த வேலையில் வருமானம் இருக்கும், வேலையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்துடன் ஆன்மீக வழிபாட்டு தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!

கன்னி ராசி

தொழில் விரிவாக்கத் திட்டம் நிறைவேறும். சகோதரர்களின் ஒத்துழைப்பு இருக்கும.  ஆனால் கடின உழைப்பு அதிகமாக இருக்கும். எனுனும் உழைப்புக்குக் ஏற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். எதிரபாராத வகையில் பரிசுகள், கௌரவம் கிடைக்கும். வேலை மாற்றத்தால், நீங்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் கிடைக்கும். தேவியின் அனுகூலம் கிடைக்கும், வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கிரகங்களின் அதிபதியான செவ்வாய் இந்த ராசிக்காரர்களிடம் கருணை காட்டும் என்பதால், துக்கம், வேதனைகள் விலகும்.

விருச்சிக ராசி:

நம்பிக்கையுடன் இருங்கள். ஆனால் சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். குடும்பத்தில் சுகபோகங்கள் விரிவடையும். பணியிடத்தில் மாற்றம் சாத்தியம், கடின உழைப்பு அதிகம் இருக்கும். அன்னை மகாலட்சுமியின் அன்பும் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில், மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீன ராசி:

தன்னம்பிக்கை, படிப்பில் ஆர்வம் இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு, வேறு இடத்திற்கு மாற வேண்டி வரும். சகோதரர்களின் உதவியாலும் கடின உழைப்பு இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News