டெல்லி: இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி மொஹாலியில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் நடைபெற உள்ளது. 100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மார்ச் 4ம் தேதி விளையாடவிருக்கிறார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது..
மொஹாலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோவிட்-19 தாக்கம் இருப்பதை கருத்தில் கொண்டும், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் பெரும்பாலான இந்திய வீரர்கள் அந்தந்த ஐபிஎல் அணிகளுடன் இணைவார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளை மாற்றி அமைத்த பிசிசிஐ
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மொஹாலியில் சர்வதேசப் போட்டி நடைபெறம் நிலையில் ரசிகர்கள் கலந்துக் கொள்ளாதது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று விராட்டின் 100வது டெஸ்ட் போட்டி குறித்த வீடியோ ஒன்றையும் பிசிசிஐ, தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
@imVkohli playing 100 Test matches is testimony to his hardwork and dedication towards the game: @Jaspritbumrah93 #TeamIndia | #INDvSL pic.twitter.com/6yh13WWkJ3
— BCCI (@BCCI) March 1, 2022
கோஹ்லியின் கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த முக்கியமான நிகழ்வைக் கொண்டாடுவதற்காக மைதானம் முழுவதும் விளம்பரப் பலகைகளை வைக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தாலும், இந்த விவகாரத்தில் பிசிசிஐ பல விமர்சனங்களை எதிர்கொண்டது.
மேலும் படிக்க | கோலியை முறியடித்து ரோகித் சர்மா உலக சாதனை!
இந்த நிலையில் இன்று விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டிக்கு, மைதானத்தின் கொள்ளளவில் 50 சதவிகித ரசிகர்களை அனுமதிக்கலாம் என பிசிசிஐ முடிவு செய்தது.
Virat Kohli will play his 100th Test match in Mohali. It is a matter of fortune & joy for us. Punjab Cricket Association has opened the match for spectators, tickets will be available online from tomorrow afternoon: Punjab Cricket Association president Rajinder Gupta#INDvsSL pic.twitter.com/yQskqlN3jo
— ANI (@ANI) March 1, 2022
விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியை மொஹாலியில் விளையாடுகிறார். இது எங்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சிக்கான விஷயம். இந்தப் போட்டியில் பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகள் நாளை மதியம் முதல் ஆன்லைனில் கிடைக்கும் என்று பஞ்சாப் கிரிக்கெட் சங்கத் தலைவர் ராஜீந்தர் குப்தா வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்திய அணியில் காத்திருக்கும் மிகப்பெரிய மாற்றம் - ரோகித் முடிவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR