Fastest Ball In Cricket: 208 கி.மீ வேகத்தில் வீசிப்பட்ட பந்து! ஷாக்கான கிரிக்கெட் உலகம்

இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார் 208 கி.மீ வேகத்தில் வீசிய பந்து, கிரிக்கெட் உலகினரை அதிர வைத்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 27, 2022, 11:14 AM IST
  • கிரிக்கெட்டில் அதிவேகப்பந்துவீச்சு
  • புவனேஷ்வர் குமார் சாதனை உண்மையா?
  • இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி
Fastest Ball In Cricket: 208 கி.மீ வேகத்தில் வீசிப்பட்ட பந்து! ஷாக்கான கிரிக்கெட் உலகம் title=

கிரிக்கெட் உலகில் அதிரவைக்கும் சம்பவம் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் அரங்கேறியது. இதுவரை அதிவேகப் புயல் என அழைக்கப்படும் ஷோயிப் அக்தர் மட்டுமே 161 கி.மீ வேகத்தில் பந்துவீசி கிரிக்கெட்டின் சாதனைப் புத்தக்கத்தில் உள்ளார். ஆனால் அவரின் சாதனையை விஞ்சும் வகையில் சுமார் 208 கி.மீ வேகத்தில் புவனேஷ்வர் குமார் பந்துவீசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். 

மேலும் படிக்க | ஐபிஎல் பார்க்க பாக்.,கிரிக்கெட்டரை அழைத்த கங்குலி

ஒரு பந்து அல்ல, இரண்டு முறை 200 கி.மீ வேகத்துக்கும் மேல் வீசி அதிர வைத்தார் புவனேஷ்வர் குமார். இந்த சம்பவத்தால் ஆடிப்போயிருக்கிறது கிரிக்கெட் உலகம். அக்தர் மற்றும் பிரெட் லீ ஆகியோர் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த அதிவேகப்பந்துவீச்சில், திடீரென புவனேஸ்வர்குமார் இடம்பிடித்தது எப்படி? என யோசிக்கலாம். இவ்வளவு நாள் அவர் அவ்வளவு வேகம் எல்லாம் வீசவில்லையே என்று நீங்கள் யோசிப்பதும் சரிதான். என்ன நடந்தது என்று இங்கே பார்க்கலாம். 

ஹர்திக் பாண்டியா தலைமையில் அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக முதல் 20 ஓவர் போட்டியில் பங்கேற்றது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது. 12 ஓவர்களாக குறைப்பட்ட இப்போட்டியில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி, 12 ஓவர் முடிவில் 108 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 9.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இப்போட்டியில் முதலில் பந்துவீசிய இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் வீசிய இரண்டு பந்துகள் 200 கி.மீ வேகத்துக்கு மேல் வீசப்பட்டதாக ஸ்பீடு கன் காட்டியது, ஒரு பந்து 201 கி.மீ என காட்டிய ஸ்பீடு கன் மற்றொரு பந்தின் வேகத்தை 208 கி.மீ வேகத்தில் வீசியதாக காட்டியது. 

மேலும் படிக்க | ரோகித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டன் இவரா?

தொழில்நுட்ப கோளாறால் நடைபெற்ற இச்சம்பவம் கிரிக்கெட் உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த ஸ்கிரீன் ஷாட்டை இணையத்தில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். அதேநேரத்தில் பவர் பிளேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார். இதுவரை பவர் பிளேவில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News