India National Cricket Team: 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ரன்னர், 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரின் ரன்னர், 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் வின்னர் என இந்திய கிரிக்கெட் அணி அதன் பலமான காலகட்டத்தில் இருப்பதாக கூறலாம். உள்நாட்டுத் தொடரோ அல்லது வெளிநாட்டுத் தொடரோ, இந்திய அணியை வெல்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதே கிரிக்கெட் ரசிகர்களால் நம்பப்பட்டு வந்தது எனலாம்.
ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் ஒப்பீட்டளவில் பலமானவை இல்லை என்றாலும், சமீபத்தில் அந்த அணிகளுக்கு எதிராக இந்திய அணி (Team India) முறைய 4-1, 3-0 என்ற கணக்கில் டி20 தொடர்களை கைப்பற்றி இருந்தது. அந்த வகையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய அணி ஓடிஐ தொடரை விளையாடியது. இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடர்தான் இந்திய அணிக்கு இந்தாண்டின் கடைசி ஓடிஐ தொடராகும்.
இந்திய அணி படுதோல்வி
அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர் தொடர்) நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு முன் 2025 ஜனவரியில் இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டியில் மட்டுமே இந்திய அணி விளையாடுகிறது. எனவே இலங்கை அணிக்கு (IND vs SL ODI) எதிரான இந்த தொடர் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. கூடவே, தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீரின் முதல் ஓடிஐ தொடரும் இதுதான். இத்தனை எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி 0-2 என்ற கணக்கில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
Sri Lanka win the Third ODI and the series 2-0.
Scorecard https://t.co/Lu9YkAmnek#TeamIndia | #SLvIND pic.twitter.com/ORqj6aWvRW
— BCCI (@BCCI) August 7, 2024
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி இரண்டாவது பேட்டிங்கையே செய்ததது. சுழலுக்குச் சாதகமான இந்த ஆடுகளங்களில் இந்திய பேட்டர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிக்காட்டாமல், சுழலுக்கு தடுமாறவே செய்தனர். சேஸிங் என்றால் உயிரைக் கொடுத்து விளையாடும் விராட் கோலி கூட இந்த மூன்று போட்டிகளில் அவசரப்பட்டு விக்கெட்டுகளை கொடுத்ததை பார்க்க முடிந்தது.
மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங்
ஆடுகளமும் பந்தும் தேய்மானம் அடையாமல் இருந்த பவர்பிளே ஓவர்களில் மட்டும் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து ஆறுதல் அளித்தார். இரண்டாவது போட்டியில் கில்லும் சற்று கைகொடுத்தார் எனலாம். இருப்பினும், மிடில் ஆர்டர் என்பது இந்திய அணிக்கு பயங்கர சொதப்பலாக அமைந்தது. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் மூன்று போட்டிகளிலும் அவர்களின் முழு திறனை வெளிக்காட்டவில்லை. கடைசி போட்டியில் மட்டும் விளையாடிய பண்ட், ரியான் பராக்கும் சொதப்ப இந்திய அணியால் மீளவே முடியவில்லை.
ஓடிஐ போட்டிகளில் இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனமாக மிடில் ஆர்டர் பேட்டிங் உருவெடுத்திருக்கிறது. இதன்பின் ஒருநாள் போட்டிகளே இல்லை என்பதால் சரியான மிடில் ஆர்டர் காம்பினேஷை உருவாக்குவது என்பது கௌதம் கம்பீருக்கு தலைவலியை கொடுக்கலாம்.
மேலும் படிக்க | ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் மோதல் தொடங்கிருச்சு..! எங்க போய் முடியுமோ?
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
இதனால், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகிய இடதுகை பேட்டர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களை ஓப்பனிங்கில் முயற்சிக்கலாம் அல்லது மிடில் ஆர்டரில் கூட முயற்சித்து பார்க்கலாம். ருதுராஜ் கெய்க்வாட்டையும் முயற்சிப்பது கைக்கொடுக்கலாம். ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சொதப்பி வருவதால் உள்நாட்டு தொடர்களில் கவனம் செலுத்துவதே ஒரே தீர்வாகும்.
விக்கெட் கீப்பர்கள் யார் யார்?
கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர்களில் சரியான இருவரை தேர்வு செய்வது முக்கியமாகும். இதில் ரிஷப் பண்ட் இடதுகை பேட்டர் என்பது அவருக்கு கூடுதல் சிறப்பு. எனவே, கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோருக்குதான் கடுமையான போட்டி இருக்கும் எனலாம். பேட்டிங்கில் இந்த பிரச்னைகளை தீர்ப்பது கம்பீருக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது.
பந்துவீச்சில் இருக்கும் பிரச்னைகள்
அதே நேரத்தில், ஓடிஐ தொடர்களில் பும்ரா - அர்ஷ்தீப் சிங் - சிராஜ் என வேகப்பந்துவீச்சு ஓரளவுக்கு பலமாக இருந்தாலும் இன்னும் புதிய பந்திலும், மிடில் ஓவர்களிலும் பந்துவீசிட துடிப்பான இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். ஷமி மீண்டும் அணியில் இணையும்பட்சத்தில் வேகப்பந்துவீச்சு வலுபெறும். சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சஹால் ஆகியோர் கைக்கொடுப்பார்கள். இவர்கள் பேட்டிங்கிலும் கவனம் செலுத்தினால் போனஸ் நன்மையாகும்.
இந்திய அணியின் பெரிய ஓட்டை
ஆல்-ரவுண்டர்களில் ஜடேஜா, அக்சர், தூபே, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக் ஆகியோர் காம்பினேஷனில் இருக்கின்றனர். இவர்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பார்மை வைத்து அணியில் வாய்ப்பளிக்கப்படும். எனவே, பேட்டிங்கில் அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் இருக்கும் பெரிய ஓட்டையை அடைப்பதே கௌதம் கம்பீருக்கு பெரிய வேலையாக இருக்கும்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு (Champions Trophy 2025) முன் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னையும், விக்கெட் கீப்பர்கள் தேர்வும், சரியான காம்பினேஷனை கண்டுபிடிப்பதும் என இந்த மூன்று விஷயங்கள்தான் இந்திய அணியின் பிரச்னையாக இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ