Ranji Trophy 2024, Tamil Nadu vs Saurashtra: ரஞ்சி டிராபி 2024 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. காலிறுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. காலிறுதியில் தமிழ்நாடு - சௌராஷ்டிரா அணிகள் மட்டுமின்றி, கர்நாடகா - விதர்பா, மத்திய பிரதேசம் - ஆந்திரா, மும்பை - பரோடா உள்ளிட்ட அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.
இதில், கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு - சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான போட்டி மூன்றாம் நாளான இன்றே முடிவை எட்டியது. தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
போராடிய புஜாரா
இந்த போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிர அணியின் கேப்டன் ஜெயதேவ் உனத்கட் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக சசௌராஷ்டிரா அணியின் தேசாய் 83 ரன்களை எடுத்தார். தமிழ்நாடு பந்துவீச்சில் சாய் கிஷோர் 5, அஜித் ராம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 338 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இந்திரஜித் 80, பூபதி வைஷ்ண குமார் 65, சாய் கிஷோர் 60 ரன்களை குவித்தனர். சிராக் ஜானி 3, உனத்கட், டிஏ ஜடேஜா, பார்த் பட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சுமார் 155 ரன்கள் பின்னடைவுடன் இன்று காலை சௌராஷ்டிரா அணி பேட்டிங்கை தொடங்கியது. இந்த முறை தேசாய் ஆரம்பத்திலேயே ஆவுட்டாக, அனுபவ வீரர் புஜாரா மட்டும் சற்று நிலைத்து நின்று விளையாடினார். மூன்றாவது விக்கெட்டுக்கு கெவின் ஜிவ்ராஜனி - புஜாரா ஜோடி 25 ஓவர்கள் வரை நின்று 55 ரன்களை சேர்த்தது.
செமி பைனலில் யாருடன் மோதல்?
அதில் கெவின் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 170 பந்துகளை சந்தித்து 46 ரன்களை சேர்த்த புஜாராவும் சாய் கிஷார் பந்துவீச்சில் ஆட்டமிழக்க அந்த அணியின் நம்பிக்கை தகர்ந்தது. அதன்படி, 122 ரன்களிலேயே சௌராஷ்டிரா ஆட்டமிழக்க, தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதன்மூலம், முதல் அணியாக இந்த சீசனின் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. மேலும், நீண்ட இடைவெளிக்கு பின் காலிறுதியில் கால்வைத்த தமிழ்நாடு அரையிறுதிக்கும் நுழைந்துவிட்டது.
மேலும் படிக்க | அடுத்த எம்எஸ் தோனி இவரு தான்... சுனில் கவாஸ்கரே சொல்லிட்டார்..!
Tamil Nadu Won by an innings and 33 Run(s) Qualified for Semi Final#TNvSAU #RanjiTrophy #TNCA pic.twitter.com/JOfVI0lLAT
— TNCA (@TNCACricket) February 25, 2024
மும்பை - பரோடா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி தமிழ்நாடு அணியுடன் அரையிறுதியில் மோதும். இந்த போட்டி வரும் மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது. இருப்பினும், இந்த போட்டி எங்கு நடைபெறுகிறது என்பது உறுதியாகவில்லை. தமிழ்நாடு 1954-55, 1987-88 ஆகிய சீசன்களில் மட்டுமே கோப்பை வென்றுள்ளது. 36 வருட கனவை நனைவாக்க தமிழ்நாடு அணி தற்போது போராடி வருகிறது. கடைசியாக 2014-15 சீசனில் பைனல் வரை தமிழ்நாடு அணி வந்தது குறிப்பிடத்தக்கது.
Knowledgeable Tamilnadu Audience supporting Domestic match till the en#TNvSAU #RanjiTrophy @cricanandha @TNCACricket @SriniMaama16 @RAREJOKESTAR05 pic.twitter.com/tBZ2TvShpr
— edwin_91003 (@E91003) February 25, 2024
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ