ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருந்த பிரெட் லீ, உலகின் அதிவேக பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் இருந்தார். எந்தவொரு கிரிகெட் வீரரும் பிரெட்லீயின் பந்துவீச்சை எதிர்கொள்ள பயப்படுவார்கள். அந்தளவுக்கு வேகம் மற்றும் துல்லியமான பந்துகள் மூலம் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைப்பதில் கில்லாடியான அவர், தான் பந்துவீச பயந்த அல்லது வெறுத்த வீரர் யார்? என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்
பிரெட்லீயின் பதில்
’ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என அழைக்கப்படும் பாகிஸ்தான் நட்சத்திர பவுலர் சோயிப் அக்தர் யூ டியூப் சேனலுக்கு பிரெட் லீ பேட்டிக் கொடுத்தார். அதில், பந்துவீசுவதற்கு பயந்த பேட்ஸ்மேன் யார்? என பிரெட்லீயிடம் சோயிப் அக்தர் கேட்டார். இந்த கேள்விக்கு பதில் அளித்த பிரெட்லீ, தான் பயந்த ஒரே ஒரு பேட்ஸ்மேன் யார்? என்றால் டெண்டுல்கர் தான் எனக் கூறினார்.
ALSO READ | IPL 2022: கொல்கத்தா மற்றும் டெல்லி டார்கெட் செய்யும் வீரர்கள்!
டெண்டுல்கரை பிடிக்காது..!
டெண்டுல்கருக்கு பந்துவீசுவது கடினம். அவரிடம் சிறந்த பேட்டிங் நுட்பம் இருந்தது. உலக பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவரிடம் இருந்து அந்த நுணுக்கத்தை கற்றுக் கொள்ள விரும்புகின்றனர். நான் விளையாடிய காலங்களில் அதனை பார்த்துள்ளேன். எனக்கு யார் பந்துவீசக்கூடாது? என்று கேட்டால் அது முத்தையா முரளிதரன். அவருடைய பந்தை எப்படி எதிர்கொள்வது? என்பதை கடைசிவரை கற்றுக்கொள்ளவே இல்லை எனக் கூறினார்.
ALSO READ | ஐபிஎல் மெகா ஏலம்: அதிகார்வப்பூர்வ தேதி அறிவிப்பு!
பிரெட் லீ Vs சச்சின்
பிரெட்லீ மற்றும் சச்சின் மோதலை பார்ப்பதற்காகவே, இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை பார்த்தவர்கள் ஏராளம். இருவருக்கும் இடையேயான போட்டி கீரியும் - பாம்பும் மோதிக்கொள்வது போலவே இருக்கும். பிரெட் லீ பந்துவீச்சை அடித்து நொறுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சச்சினும், சச்சின் விக்கெட்டை எடுத்தே ஆகவேண்டும் என பிரெட்லீயும் போட்டி போடுவார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினை 14 முறை அவுட்டாக்கியிருக்கிறார் பிரெட்லீ.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR